அவர் தாக்கல் செய்த நிநிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:



  • புதுச்சேரியில் 9,924 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

  • புதுச்சேரி தாக்கல் செய்யப்பட்ட 9,924 கோடி பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது.

  • இந்த நிதிநிலை அறிக்கையில், ரூ.2140 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும், ரூ.1715 கோடி கடன் மற்றும் வட்டிக்கும், ரூ.1591 கோடி மின்சாரம் வாங்கவும், ரூ.1290 கோடி முதியோர் ஓய்வூதியத்திற்கும்,  ரூ.1243 கோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  • விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூபாய் 5,000 மானியம் வழங்கப்படும்.

  • விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

  • புதிய உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


  • நிலத்தடி நீர்மட்டத்தைப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உயர்த்த பிரதான் மந்திர் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பபடும்.

  • விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.

  • காரைக்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 60 லட்சம் ரூபாய் செலவில் 6 புதிய கிணறுகள் அமைக்க உள்ளது.

  • புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன, விவசாயிகளுக்கு 10 ஆயிரம் தேக்கு, சந்தன மரங்கள் வழங்கப்படும்.

  • பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் செங்குத்து தோட்டம் உருவாக்கப்படும்.

  • ஆரோக்கியமான கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

  • கறவை மாடுகள் பாராமரிக்கவும், கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் தீவனம் நடப்பாண்டு வழங்கப்படும்.

  • கால்நடை இனப்பெருக்கம் செய்ய தாது ஊப்பு கலவை வழங்கப்படும்.

  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும்.

  • கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.

  • அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் உள்ளிட்டவைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

  • புதுச்சேரியில் மூட்டப்பட்டுள்ள நியாவிலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

  • இலவச அரிசி வழங்க ரூ.197.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான சத்திய கூறுகள் ஆராயப்படும்.

  • 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அரசு பாடுபடும்.

  • மாணவர் இடை நிற்றலை தவிர்க்க கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.

  • இதற்காக கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • புதுச்சேரி மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. 24 மணி நேரமும் மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

  • மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை.

  • கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

  • புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்றுள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி

  • கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் அனைத்து வசதிகள் உள்ளடக்கிய வேளாண் நவீன வளாகம் அமைக்கப்படும்.

  • புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வரும் செப். 23 மற்றும் 24ந்தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.

  • ஆரோக்கியமான கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

  • திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலை சுற்றி, தேரோடும் நான்கு வீதிகளையும் செப்பனிட ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • 5 கோடி ரூ. செலவில் கட்டப்படும் நீச்சல் குளம் இந்த ஆண்டு திறக்கப்படும்.

  • 2 கோடி ரூபாய் செலவில் பாகூரில் புதிய பேருந்து நிலையம், ஏனாமில் 7 கோடி மதிப்பில் ஏ.என்.எம். பள்ளி அமைக்கப்படும்.

  • மாகி பகுதியில் 19 கோடி ரூபாய் செலவில் கடலோர காவல் நிலையம்,தங்கும் விடுதி அமைக்கப்படும்