மயிலாடுதுறையில் அமமுக சார்பில் நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தின் மேடையில் முன்பு அமர்ந்து எனக்கு பசிக்கும்ல.. நான் சாப்பிடனும்ல.. என்பதுபோல பழைய சோற்றை ருசித்த நபரால் சிறிது நேரம் கலகலப்பு ஏற்படுத்தியுள்ளது.

அமமுக பொதுக்கூட்டம் 

மயிலாடுதுறை விஜயா தியேட்டர் அருகில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளினை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

JEE Mains 2024: ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு; சர்வர் பிரச்சினையால் விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்கக் கோரிக்கை!

காலியான நாற்காலிகள் 

மாலை 6 மணிக்கு துவங்கிய பொதுக் கூட்டத்தில் பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தனர். அப்போது நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக செல்ல செல்ல இருக்கைகள் காலியாக துவங்கின. இறுதியாக சிறப்பு பேச்சாளர் பேசுகையில் பொதுக்கூட்டம் முழுவதும் காலி இருக்கைகள் காணப்பட்டது. இருப்பினும் சிறிதும் மனம் தளராத பேச்சாளர்கள் சிறப்புரையாற்றிக் கொண்டிருந்தனர். 

CAG's Shocking Report: மதுபானக் கொள்கையால இத்தனை ஆயிரம் கோடி கோவிந்தா.? அதிர்ச்சி தரும் டெல்லி ரிப்போர்ட்...

மேடை முன்பு தரையில் அமர்ந்து உணவு உண்ட நபர்

அப்போது மேடைக்கு கீழே அமர்ந்தபடி பழைய சோற்றை சுவைத்துக் கொண்டே பொதுக்கூட்டத்தை ஒரு நபர் கண்டு, பேச்சை கேட்டு ரசித்தார். தொடர்ந்து தரையில் அமர்ந்து உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்த நபரை அமுமுக நிர்வாகிகள் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த நபர் எனக்கு பசிக்கும்லல, சாப்பாடு தான முக்கியம் என்ற மீம்ஸ்க்கு ஏற்றாற்போல் உணவை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார். 

Maha Kumbh 2025 : தூய்மை பணியில் 15000 பேர் .. கும்பமேளாவில் புதிய உலக சாதனை?

சுவாரஸ்யமான நிகழ்வு 

பின்னர் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் அவரை விட்டு விடுங்கள் சாப்பிடட்டும் என நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். பின்னர் அந்த நபர் சாப்பிட்டு முடிக்கும் வரை நிர்வாகிகள் அவரை சூழ்ந்தே நின்று கொண்டிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.