சர்வாதிகாரம், அதிகார வேட்கைக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  


தகுதிநீக்க நடவடிக்கை குறித்து ட்வீட் செய்துள்ள பிரியங்கா காந்தி, ”குடும்ப அரசியல் செய்கிறோம் என்று கூறுகிறீர்கள்; ஆனால், இந்த குடும்பம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ரத்தம் சிந்தி பாடுபட்டது. ஜனநாயகத்தை மலரச் செய்தது. ஆனால், நீங்கள் ஜனநாயகத்தை அழிக்க நினைக்கிறீர்கள்;


எங்கள் குடும்பம் உண்மைக்காகவும், மக்களுக்காவும் போராடியது; குரல் கொடுத்திருக்கிறது; சமூக நீதிக்காக குரல் கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்புமிக்க குடும்பம், ஒருநாளும் கோழைகளுக்கு, அதிகார வெறிக்கு அடிபணிந்ததில்லை. இனியும் அப்படியே! என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், சர்வாதிகாரமிக்க உங்கள் முன் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


பா.ஜ.க.-வைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தையும் அவமதித்து,  நேரு பெயரை ஏன் வைக்கவில்லை என்று  நாடாளுமன்றத்தில் கேட்டீர்கள்... ஆனால் எந்த நீதிபதியும் உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவில்லை. உங்களை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யவில்லை; ராகுல்காந்தி மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ராகுல் காந்தி தொடர்ந்து உண்மையை பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் எதற்கு அஞ்சாதவர் என்று பிரியங்கா காந்தி ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ் தலைவர்)









கனிமொழி எம்.பி:


ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:


ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதித்திட்டம் நடைபெற்றுள்ளது. இது திட்டமிட்ட அரசியல் சதி. இதை வன்மையாக கண்டிக்கிறோம். 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யலாம் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கை 


முத்தரசன்: 


ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கு வேறு எந்த காரணமும் தேவையில்லை. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. 




மேலும் வாசிக்க..


RahulGandhi Disqualified: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம்; ராகுல்காந்தியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?


RahulGandhi: தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி சிறைக்கு செல்வாரா? மாட்டாரா?