பாஜக, அதிமுக கட்சிகளுக்கு இடையே சுமுகமான உறவு இல்லாத சூழலில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றிருந்தார். அதிமுக கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை அவர் தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.


கூண்டை விட்டு வெளியே வர தயார்:


இந்நிலையில், தூத்துக்குடியில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை பல்வேறு முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிமுகவுடனான கூட்டணி குறித்து மறைமுகமாக பேசிய அவர், "இத்தனை ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி தற்போது கூண்டை விட்டு வெளியே வர தயாராகி விட்டது. 


கிளி பறக்க தயாராக உள்ளது. பறக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது. பாஜகவால் பறக்க முடியும். பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது. தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் வந்துவிட்டது" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "மோடியின் ஆட்சி 9 ஆண்டு காலத்தை நிறைவு செய்து 10 வது ஆண்டில் காலெடுத்து வைத்து உள்ளோம். 46 கோடி மகளிருக்கு வங்கி கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளது. 


2024 பாஜக வெற்றி பெற்ற பிறகு மக்களை வசியம் செய்து விட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி சொல்லும். பாஜக இந்துக்களுக்கான கட்சி என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.


அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா?


மணிப்பூர் மேகாலயா திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி. கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் அங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி. கிறிஸ்தவர்களும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.


எல்லா இடத்தில களம் மாறிவிட்டது. கூண்டுக்குள் இருக்கும் கிளியை போன்று இல்லாமல் கூண்டை விட்டு வெளியே பறக்கும் கிளியாக பாரதிய ஜனதா தமிழகத்தில் மாறி இருக்கிறது. கூண்டை உடைத்து விட்டு வெளியே பறப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தயாராகி விட்டது. தமிழகத்திலும் களம் மாறிவிட்டது.


தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியலை போன்று நடந்தால் தமிழகம் பின்னோக்கி செல்லும்
திமுக அமைச்சர்கள் கண் முன்னாள் கொள்ளையடித்து கொண்டு உள்ளார்" என்றார்.


பிரபாகரனை சுட்டு கொள்ள உதவிய உளவுத்துறை:


"2024 பாஜகவுக்கான காலம். இந்தியா இல்லாமல் இலங்கை இல்லை என சொல்லும் அளவில் உள்ளது. இந்தியா இல்லாமல் இலங்கை இல்லை என சொல்லும் அளவில் உள்ளது. இலங்கை அதிபர் மே மாதம் இந்தியா வருகிறார். பிரபாகரனை சுட்டுக் கொள்ள உதவியது காங்கிரஸ் அரசு. உளவுத்துறையும் பிரபாகரன் சுட்டு கொள்ள உதவி செய்தது.


2024 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அனுப்ப வேண்டும். ஈரோடு கிழக்கில் 30 நாள் காய்கறி இலவசம் வழங்கப்பட்டது. இப்படியே போனால் ஜனநாயகம் முட்டுச்சந்தில் தான் நிற்கும்.


இளைஞர்களை தொழிலதிபராக்கி வேலைவாய்ப்பு கொடுப்பதை யோசிப்பது மோடி. இளைஞர்களை போஸ்டர் ஒட்ட செய்து கோபாலபுரத்திற்கு அடிமையாக்கியது திமுக. தமிழகத்தில் புதிய பாதை கிடைத்து உள்ளது.
மோடி உயர்த்திக் கொண்டிருக்கிறார்" என அண்ணாமலை பேசியுள்ளார்.