இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில், பாஜக தேசிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட, தேசிய மற்றும் மாநில பதவிகளுக்கான பொறுப்பாளர்களை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நியமித்தார். இதில், முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக ஹெச்.ராஜா மற்றும் குஷ்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


 






தேசிய செயற்குழு உறுப்பினர்களில் மாற்றி அமைக்கப்பட்ட உறுப்பினர்களின் 80 பேர் அடங்கிய பட்டியலில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் முன்னாள் கட்சி தலைவர்கள் மற்றும் தற்போதைய மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


50 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் 179 நிரந்தர அழைப்பாளர்கள், முதலமைச்சர்கள், துணை முதல்வர்கள், தேசிய செய்தித் தொடர்பாளர்கள், தேசியப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாநிலப் பிரிவுத் தலைவர்கள் ஆகியோரும் தேசிய செயற்குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் மத்திய அமைச்சர்கள் டாக்டர் மகேஷ் சர்மா, விஜய் கோயல், டாக்டர் சி.பி. தாக்கூர், தற்போதைய மத்திய அமைச்சர்கள் ராவ் இந்தர்ஜித் சிங், அஷ்வினி குமார் சவுபே மற்றும் பிரஹ்லாத் சிங் பட்டேல், ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் இந்த முறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.




மக்களவை உறுப்பினர்கள் மேனகா காந்தி மற்றும் அவரது மகன் வருண் காந்தி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக வருண்காந்தி டுவிட்டர் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். காந்தி கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. “கொலையின் மூலம் எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்த முடியாது. விவசாயிகளின் அப்பாவி இரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்” ட்வீட் செய்திருந்தார்.


கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் அமித் ஷா தலைமையில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் இரண்டு ஆண்டுகளாக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை. இந்தநிலையில், நவம்பர் 7ஆம் தேதி தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்...


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண