கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகளுடன் வெங்கக்கல்பட்டியைச் சேர்ந்த சரோஜா என்பவர் தனது இடத்தை மீட்டு தரக்கோரி புகார் மனுவை அளிக்க வந்தார். அந்த மனுவில் எனக்கு உண்டான மூன்றே முக்கால் ஏக்கர் சொத்துக்களை திமுகவைச் சேர்ந்த சிலர் அடாவடியாக அபகரிக்க முயற்சி செய்து வருவதாக புகார் தெரிவித்து இருந்தார்.
நிலப் பிரச்சனை சம்பந்தமாக புகார் தொடர்பாக வையாபுரி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீதர்னுக்கு தகவல் செல்ல உடனே அவரும் ஒரு புகார் மனுவை தயார் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து எனது நிலத்தை மீட்டு தரக்கோரி புகார் ஒன்றை அளிக்க வந்தார்.
பின்னர், இது சம்பந்தமாக ஸ்ரீதர் தெரிவிக்கையில் எனக்கு சொந்தமான தாந்தோணி கிராமத்தில் சுமார் மூன்றே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை நான் கடந்த 2004ஆம் ஆண்டு மேல கரூர் சார் பதிவு அலுவலகத்தில் ரொக்கப் பணம் செலுத்தி அந்த இடத்தை எனது பெயரில் பதிவு செய்துள்ளேன் . தற்போது வரை அந்த இடத்தில் முழு உரிமை எனக்கு உள்ளது. இந்நிலையில் நேற்று வெங்கக்கல் பட்டியைச் சேர்ந்த சரோஜா மற்றும் அவரது மகன்கள் உடன் எனக்கு சொந்தமான இடத்தில் பந்தல் அமைத்துள்ளனர்.
இந்த தகவல் எனக்கு தெரிய வந்தவுடன் நான் சென்று அங்கு கேட்டதற்கு, இது எங்களுடைய சொத்து என்றும் அரிவாள் மற்றும் உருட்டுக் கட்டியுடன் என்னை மிரட்டுகிறார்கள் எனவும் இதற்கு பயந்து நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு கேட்டும் எனது சொத்தை மீட்டுத்தரக் கோரியும் புகார் அளிக்க வந்தேன் என தெரிவித்தார்.
முதலில் புகார் கொடுக்க வந்த வெங்கக்கல் பட்டியை சேர்ந்த சரோஜா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கரூர் மாவட்டம் தாந்தோணி பகுதியில் உள்ள ஒரே இடத்திற்கு இரண்டு தரப்பினர் மோதிக் கொள்வதால் இந்த சம்பவம் கரூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஒரே இடத்தை ஆக்கிரமிப்பதாக மாறி மாறி இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிபுகார் மனுக்களை அளித்ததால் காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். ஒரே இடத்திற்கு இரண்டு தரப்பினரும் உரிமை கோருவதால் இதற்கு நீதிமன்றம்தான் தீர்வு சொல்ல வேண்டும் என்றனர்.
இரண்டாவதாக புகார் அளிக்க வந்த வையாபுரி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர்
இந்த இடம் குறித்து கடந்த வாரத்திலும் வேரோரு நபர்கள் மீது புகார் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகார் சம்பவத்தால் தற்போது கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைத்தளங்களில் திமுக அடாவடியாக விடுதலை கட்சியின் நிர்வாகிகள் நிலத்தை அபகரிக்கிறது என்ற கருத்துகளை பதிவிட்டு அதனை ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து இரண்டாவதாக புகார் கொடுத்த ஸ்ரீதரிடம் பேசியபோது,
நீங்கள் திமுக நிர்வாகி என்று எதிர்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர் என்ற கேள்விக்கு நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. விடுதலை சிறுத்தை கட்சியின் சிலர் என்னை தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசி என் இடத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். மேலும் இது சம்பந்தமாக காவல்துறையில் வழக்கு பதியப்பட்டு அந்த வழக்கின் போது போலீசார் எதிர் தரப்பினருக்கு இந்த சொத்தில் எந்த பங்கும் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர். இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு நான் திமுக நிர்வாகிகள் என பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான அவதூறு தகவல் என ஸ்ரீதர் தெரிவித்தார்.