அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தை அடுத்த காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு. இவர் வன்னியர் சங்கத் தலைவராக இருந்ததுடன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தவர். `காடுவெட்டி குரு’ என அனைவராலும் அறியப்படும் இவர், கடந்த 2018 -ம் ஆண்டு, மே மாதம் 25 -ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அதனைத் தொடர்ந்து வன்னியர் சங்கத்தினர் மற்றும் பா.ம.க-வினர் பிப்ரவரி  1-ம் தேதியை குருவின் பிறந்தநாளை கொண்டாடி  வருகின்றனர்.




அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் குருவின் 62வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த குருவின் திருவுருவப்படத்திற்கு புகழஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும். அன்னதானமும் வழங்கப்பட்டது.


Budget 2023: தமிழ்நாட்டு மக்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம்.. பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து..!




இதேபோல் கேணிக்கரை, குத்தாலம் கடை வீதி உள்ளிட்ட இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து மணல்மேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, மக்களுக்காக போராடிவரும் மருத்துவர் அன்புமணி ராமதாசை தமிழ்நாடு முதல்வராக்க இந்த நாளில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் உறுதி ஏற்பதாக தொண்டர்கள், நிர்வாகிகள் சூளுரை எடுத்துக் கொண்டனர். இதில், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பழனிசாமி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம் சக்திவேல், மாவட்ட செயலாளர் முத்து.  நிர்வாகிகள் தங்க அய்யாசாமி, கணேசன், கமல்ராஜா, காசி பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களை குறிவைத்த மழை... வானிலை மையம் கொடுத்த அப்டேட் இதுதான்!


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற