விழுப்புரம் : திண்டிவனத்தில் திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானூர் ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது :


உங்களைப் பார்க்கும் போது எனக்கு உற்சாகம், என்னை பார்க்கும் பொழுது உங்களுக்கு உற்சாகம் ஆனால் தேர்தல் வந்தால் அது ஓட்டாக மாறவில்லை. செஞ்சி தொகுதி பாமகவின் கோட்டை தற்போது கோட்டை விட்டுவிட்டு கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். 42 ஆண்டு காலத்தில் 32 ஆண்டுகள் கட்சி தொடங்கி ஒருமுறைகூட ஆட்சி செய்யவில்லை என்ற கோளாறு மக்களிடமா அல்லது பொறுப்பாளர்களிடமா அல்லது கட்சிக்கு தலைமை தாங்குகின்ற, கட்சி ஆரம்பித்து 42 ஆண்டு காலம் உங்களோடு பயணித்து  வந்து கொண்டிருக்கின்றார் என்னிடமா. எங்கோ கோளாறு இருக்க வேண்டும் என்பதை கண்டறியவேண்டும்.




மாறி மாறி கூட்டணி


தனியாக வேண்டாம், நாம் பலம் இழந்து இருக்கிறோம் நம்மிடம் சக்தி இல்லை! சக்தி இழந்து கிடக்கிறோம் அதனாலே கூட்டு சேருவோம் எந்த கட்சி உடனாவது ஒற்றுமையாக இருப்போம் என்று நீங்கள் வற்புறுத்தி சொன்னதன் பேரில் நானும் உங்களோடு சேர்ந்து தவறான முடிவை எடுத்து, மாறி மாறி கூட்டணி வைத்து 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பிறகு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் 6  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் பங்கு அமைச்சர்கள்; இப்படியெல்லாம் பார்த்தீர்களா ஐயா இதற்காக தான் கூட்டணி வைக்க சொன்னோம். பத்தாண்டு காலமாக மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் மற்றும் அமைச்சர்கள் பெற்றிருக்கிறோம் இங்கே 5 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றிருக்கிறோம் இதற்காகத்தான் தனியாக நிற்க வேண்டாம் என்று சொன்னேன் என்று நீங்கள் என்னிடம் கூறியுள்ளீர்கள் என்று ராமதாஸ் கூறினார்.


மாம்பழ சின்னம் அங்கீகாரம் இழப்பு :


இதை தொடர்ந்து பேசிய ராமதாஸ் எப்பொழுது கெஞ்சிக், கூத்தாடி, வாதாடி, கோபித்துக்கொண்டு கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று முடிவு பண்ணேன். ஐந்து தொகுதிகளில் உங்கள் 5 தொகுதிகள்  கொடுக்கிறோம் 12வது கொடுக்கிறோம் அதன் பிறகு தலைவர் பற்றி பேசி மெல்ல மெல்ல நகர்ந்து இருபத்திமூன்று தொட்டு. 23 க்கு மேலே பேசாதீங்க எழுந்திருங்க என்று சொல்ல 23 தொகுதிகளில் நின்று ஐந்து தொகுதிகளை மாபெரும் வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதிலே மேலும் 2 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தால்  மாம்பழ சின்னம் அங்கீகாரம் கிடைத்திருக்கும்.‌


ஒரு தொகுதியில் மாவட்ட செயலாளர் திமுகவுக்கு வேலை செய்து திமுகவை வெற்றி பெறச் செய்துள்ளார்.  மற்றொரு பகுதியில் பெரிய தலைவர்கள், காங்கிரஸிற்கு வேலை செய்து ஓட்டுப்போட பணம் கொடுத்து அங்கே ஒரு மாவட்ட செயலாளரை தோற்கடித்துள்ளார்கள். முன்பெல்லாம் நாம் கூறிக் கொண்டிருந்தோம், அவர்கள் அந்த கட்சிக்கு சோரம் போனார்கள், இந்தக் கட்சிக்கு சோரம் போனார்கள் என்று தற்பொழுது அந்த வியாதி நம்மை பிடித்துக்கொள்ள  உள்ளாட்சித் தேர்தலில் நமது வேட்பாளர்கள் சோரம் (விலைக்கு) போனார்கள். ஏன் போனார்கள் என்று கேட்டால் திமுக பணம் கொடுக்கிறான் அதிமுக பணம் கொடுக்கிறான், நீ என்ன கொடுக்கிற என கேள்வி கேட்கிறான்?






 42 ஆண்டு கால உழைப்பு கட்சி 89ல் கட்சி தொடங்கி இவ்வளவு வருடமாக 5000 கவுன்சிலர் 10 கவுன்சிலர் தான் வெற்றி பெற்றிருக்கிறது இதுதான் வளர்ச்சியா? அடுத்த தேர்தல் வந்தால் பத்து ஐந்தாகும் நிறைய சோரம் போகும், கட்சி காரனே காலை வாரி விடுவான். வேட்புமனு தாக்கல் செய்ய ஆள் இல்லாமல் போவார்கள் என்று பொறுப்பாளர்கள் சொல்ல, அதிலும் குறிப்பாக ஒன்றிய செயலாளர்கள் சொல்ல கட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்ற நிலையிலேயே அந்த காட்சியை பார்த்த பொழுது உங்களோடு பகிர்ந்துகொள்ள வந்திருப்பதாக தெரிவித்தார்.


லோக்கல் அண்டர் ஸ்டாண்டிங்:


லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங் என்று சொல்லி பல இடங்களில் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டார்கள். நான் ஒரு ட்விட்டர் போட்டேன், லோக்கல் அண்டர் ஸ்டாண்டிங் புரிகிறதா என்று தெரிவு படுத்தினேன்.  பஞ்சாயத்து பிரசிடெண்ட்  நிறுத்துவதற்கு ஆள் கிடைக்கவில்லை அதற்கு பல காரணங்கள் அசிங்கமாக கேவலமாக கண்டிக்கத்தக்க அருவருக்கத்தக்க காரணங்கள் இருந்தாலும் இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். வேட்பாளர் நிறுத்துவதற்கு ஆள் இல்லை, நாங்கள் போடவில்லை, ஏனென்றால் அண்டர் ஸ்டாண்டிங், லோக்கல் அண்டர் ஸ்டாண்டிங் என கட்சிக்காரர்கள் கூறியுள்ளனர்.


அவ்வளோ பலவீனமாக கட்சி மாறியுள்ளது.  நகர் மன்றம் பேரூராட்சி தேர்தல் வரப்போகிறது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று தெரியவில்லை? தற்பொழுது அவரை தற்காலிகமாக அக்கட்சியிலிருந்து விலகி வைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவத்தால் நாம் நாளுக்கு நாள் பலம் பெறுகிறோமோ அல்லது பலவீனம் ஆகிறோம் என்றால் இனி தொடர்ந்து கட்சி நடத்துவதில் அர்த்தம் இல்லை.


என் உயிர் போனாலும் கொள்கை பிடிப்போடு இருப்பேன்


என் உயிர் போனாலும் கொள்கை பிடிப்போடு இருப்பேன், என் உயிர் போனாலும் நான் வரமாட்டேன் ஒற்றுமையாக இருக்க மாட்டேன் சோரம் போக மாட்டேன் அடுத்தவனிடம் ஒரு காசு வாங்க மாட்டேன் என்று நாம் சொல்ல வேண்டும். அப்படி தானே உங்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறேன், வளர்த்து இருக்கிறேன். பல லட்சம் செலவு செய்து அரசியல் பயிலரங்கத்தை நடத்தி உங்களுக்கு பயிற்சி நடத்தி வருகிறேன். எல்லாம் பழங்கதை ஆனதே என்று கூறினார். 




திண்ணைப் பிரச்சாரம் மற்றும் சோசியல் மீடியா மூலம் பிரச்சாரம் செய்யவில்லை என்றால் கட்சி நடத்துவதே பயனில்லை


நாம் எதற்கு போராட வில்லை, நம்மை போல் யாராவது போராடியது உண்டா எந்த தலைவராவது உண்டா எந்த கட்சியாவது உண்டா என மருத்துவர் ராமதாஸ் கூறினார். கட்சி நிர்வாகிகள் சமூக ஊடகங்கள் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலமாக கட்சியை கொண்டு சேர்க்கவேண்டும் என்னும் நான்கு ஆண்டு காலம் இருக்கிறது அதற்குள்ளாக கட்சியை பலப்படுத்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கூறினார்.


இந்த திண்ணைப் பிரச்சாரம் மற்றும் சோசியல் மீடியா மூலம் பிரச்சாரம் செய்யவில்லை என்றால் கட்சி நடத்துவதே பயனில்லை காசுக்கு விலை போகிறவன் எந்த காரணத்தையும் கட்சியை காட்டிக் கொடுப்பான். இன்று உங்களை சந்திக்க காரணம் உங்களிடம் இந்த கேள்வி கேட்பதற்காக தான்.  எங்கே போனது ரோஷம்! எங்கே போனது வீரம்! எங்கே போனது மனம்! எங்கே போனது சூடு! எங்கே போனது சொரணை! சொல்லுங்கள் என்று கட்சி நிர்வாகிகளை கேட்டார். நீங்கள் சொல்லுங்கள் எங்கும் போகலையா இது தப்பு பண்ணிட்டோம் இந்த மாதிரி தப்பு நடக்காது கோடி கோடியாக கொடுத்தாலும் எங்க உடம்பில் ஓடுற ரத்தம் வீர ரத்தம், நாங்கள் மானத்தோடு வாழ்வோம் மரியாதையோடு வாழ்வோம்,  தவறு செய்து விட்டோம் இனி அந்த தவறை செய்யமாட்டோம் என சொல்ல வேண்டும் எனக் கூறினார்.


நகராட்சி பேரூராட்சி வேட்புமனு வாங்குவதற்கு முன்பாக நாம் என்ன செய்யப் போகிறோம்? என கேள்வி எழுப்பினார். கற்பி ஒன்றுசேர் என முன்னிறுத்தி டிசம்பர் முதல் லட்சக்கணக்கான மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினோம். மனு வாங்க இடத்திற்கு நாம் போக வேண்டும் என்று பேசி வருகிறேன் ஆனால் இப்போது கவுன்சிலர்களுக்கு மனுப் போட ஆள் இல்லை என மாவட்ட செயலாளர் சொல்கிறார்கள். என்னுடைய வேதனையை யாரிடம் சொல்வது உங்களிடம் தானே சொல்ல முடியும். உங்களையும் நம்பித்தானே கட்சியை நடத்தினேன். 


அதனால் சொல்கிறேன் இனிவரும் காலம் நம் காலமாக இருக்க வேண்டும் அது தமிழ்நாட்டிற்கு விடியும் காலமாக இருக்க வேண்டும் அந்த விடிவை பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்கின்ற நாளாக இருக்க வேண்டும், என்றார்.