பரபரப்பான மக்களவைத் தேர்தலின் பிரச்சாரத்திற்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நமது ஏபிபியின் மேற்குவங்க செய்தி ஊடகமான ஏபிபி அனந்தாவுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். மிகவும் நீண்ட அந்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார். 

Continues below advertisement

அதில் பிரதமர் இஸ்லாமிய மக்களுக்கு சில அறிவுரைகளைக் கூறினார். அதில், உங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுங்கள், உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

  • உங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுங்கள் இல்லையென்றால் அவர்கள் பின் தங்கிவிடுவார்கள். 
  • உங்கள் குழந்தைகளின் ஒருகையில் குர்ஆனையும் மறு கையில் கணினியையும் கொடுங்கள். 
  • உங்கள் குழந்தைகள் குறித்து பாஜக அரசு கவலைப்படுகின்றது, குழந்தைகளின் கல்வி மீது நாம் தனிக்கவனம் செலுத்தவில்லையென்றால் ஒரு சமூகமாக நாம் பின் தங்க நேரிடும். 
  • ஆரோக்கியமான நாட்டிற்கு ஒவ்வொரு சமூகமும் மிகவும் முக்கியமானது. 

இவ்வாறு பிரதமர் மோடி தனது அறிவுரைகளில் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

மேலும் அந்த பேட்டியில் பிரதமரிடம் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த மிகவும் கவனத்தை ஈர்த்த பதில்களைக் இங்கு காணலாம். 

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல்.

இருப்பினும், நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும்.  மேலும், "அரசியல் நிர்ணய சபையில் இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடந்தபோது - மத அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.  மத அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது. நான் அளித்த இடஒதுக்கீடு மத அடிப்படையில் இல்லை. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்".

இப்போது மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது.  அவ்வாறு வழங்கியவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் "மதத்தின் பெயரால் நம் நாட்டைப் பிரித்துவிட்டார்கள். இதன் மூலம் பல அரசியல் கட்சிகள் வாக்கு அரசியல் செய்து வருகின்றனர். மேற்கு வங்கத்தின் சுமார் 77 சமூகங்கள் ஓபிசி ஆக்கப்பட்டன. இதெல்லாம் வாக்குகளுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என பிரதமர் கூறினார்.