Chennai Power Cut: சென்னையில், நாளை பிப்ரவரி 5ஆம் தேதி, பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் , எதிர்காலத்தில் நிகழாமல் சரி செய்யப்படும். இந்நிலையில், நாளை எந்த பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது என பார்ப்போம்.
சென்னையில் நாளை மின்தடை: 05.02.2025
இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது இருக்காது.
Also Read: Income Tax 2024 Vs 2025: கடந்த பட்ஜெட் வரி விகிதம் Vs புதிய பட்ஜெட் வரி விகிதம்: எவ்வளவு இருந்தது ?
சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்:
அடையாறு:
எஸ்பிஐ காலனி, அருணாச்சல புரம், ராமசாமி தோட்டம், பெசன்ட் அவென்யூ, அடையாறு பாலம் சாலை, ஆர்.எஸ். காம்பவுண்ட், கற்பகம் கார்டன், பத்மநாபா நகர் 4 முதல் 5வது தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவரத்தினம் நகர், சாந்தி காலனி, வெங்கடேஷ்வரா நகர், எல்பி ரோடு. பெசன்ட் நகர் பெசன்ட் நகர் 1 முதல் 7வது தெரு. சாஸ்திரி நகர் லட்சுமி புரம், எம்ஜி சாலை, சிவகாமி புரம், மாளவியா அவென்யூ, ராதா கிருஷ்ணன் நகர், மருந்தீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, குப்பம் கடற்கரை, சிஜிஇ காலனி, ஆர்எஸ்ஜிடி காலனி, ஜெயராம் தெரு, எல்பி சாலை, சுப்பிரமணியம் காலனி,முத்துலட்சுமி தெரு, வால்மீகி நகர், ஆர்பிஐ காலனி, கிழக்கு மாட தெரு, கலாசேத்ரா சாலை மற்றும் வால்மீகி தெரு.
வியாசர்பாடி:
புது நகர், காந்தி நகர், எம்பிஎம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1வது முதல் 8வது மெயின் ரோடு, எம்கேபி நகர் 1 முதல் 6 வரை வது குறுக்குத் தெரு, 10 முதல் 19வது கிழக்கு குறுக்குத் தெரு, ஏபிசி கல்யாண்புரம், இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர்,சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு மற்றும் 42வது தெரு, சாமியார்தோட்டம் 1 முதல் 4வது தெரு, வோயலூர், காட்டூர், திருப்பலைவனம், கடப்பாக்கம், கணியம்பாக்கம், செங்கழுநீர்மேடு, ராமநாதபுரம், மேரட்டூர், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம்.பல்லா தெரு 1 முதல் 4, உதய சூரியன் நகர், திருவெள்ளவயல்:ஊரணம்பேடு, காட்டுப்பள்ளி மற்றும் நெய்தாவொயல்,
குன்றத்தூர்:
குன்றத்தூர் மெயின் ரோடு,ஆர்த்தி தொழிற்பேட்டை, சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோயில் தெரு, விக்னேஷ்வரா நகர் பகுதி, எம்.எஸ்.நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயந்திரா எஸ்.அரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர் மற்றும் ஜெயலட்சுமி நகர்.
இரும்புலியூர்:
ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், யமுனா தெரு, நர்மதா தெரு, சாந்தி நகர், செல்லியம்மன்கோயில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜாதோட்டம், பொன்னன் நகர், திருவள்ளூர் தெரு மற்றும் கே.கே.நகர் .
ஜி ஜி நகர்:
ரத்தினவேல் பாண்டியன் தெரு, கிழக்கு முகப்பேரின் 2 முதல் 5வது பிளாக், ஓஆர்ஐ சாலை, புகழேந்தி சாலை. நொளம்பூர் 1வது மெயின் ரோடு, 6வது மெயின் ரோடு, துரை அபார்ட்மென்ட், ERI ஸ்கீம், 10வது தெரு, VGN ஃபேஸ் 2 மற்றும் TRI ஸ்டார் அபார்ட்மெண்ட்.
கோவூர்:
இரண்டாம் கட்டளை, மணிகண்டன் நகர், மேத்தா நகர், மூன்றாம் கட்டளை, கரைமா நகர் சாதனாதம்புரம், புதுவேடு, ரெட்டி தெரு, அன்னைதெரசா நகர் மற்றும் அப்துல்கலாம் தெரு.
போரூர்:
லட்சுமி நகர் 40 அடி ரோடு, நியூ காலனி, பிள்ளையார் கோயில் தெரு, லட்சுமி நகர் அண்ணாசாலை, மூர்த்தி அவென்யூ மற்றும் டிரங்க் ரோடு.
Also Read: 5வது பட்டியலை வெளியிட்ட விஜய்.! புதிய 19 தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்...