டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள முதியவர்களுக்கு சேவை செய்வதிலிருந்து அரசியல் சுவர்கள் என்னைத் தடுக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


ஆயுஷ்மான் பாரத் திட்டம்:


70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்கும் வகையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார்.


பிரதமர் மோடி தெரிவித்ததாவது “ ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும், அவர்களுக்கு ‘ஆயுஷ்மான் வய வந்தனா’ அட்டை வழங்கப்படுகிறது எனவும் பிரதமர் தெரிவித்தார். டெல்லி மற்றும் வங்காளத்தைச் சேர்ந்த 70 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு "சேவை" செய்ய முடியாமல் போனதாகவும் , அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


Also Read: பாசிசமா , பாயாசமா என்பது சினிமா வசனம் போல் உள்ளது - விஜய் பேச்சு குறித்து சிதம்பரம்


மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி:


அதற்குக் காரணம் டெல்லியில் உள்ள அரசாங்கமும் மேற்கு வங்காள அரசாங்கமும் இந்த ஆயுஷ்மான் யோஜனாவில் சேரவில்லை," என்றும் பிரதமர் கூறினார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் அரசாங்கத்தையும் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியையும், பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். “அரசியல் காரணங்களுக்காக, ஆயுஷ்மான் திட்டத்தை செயல்படுத்தாததால் டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள முதியவர்களால், பயனடைய முடியவில்லை. 


இதனால்,  டெல்லியில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடமும், மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடமும் நான் உங்களுக்கு சேவை செய்ய முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


 " அரசியல் நலன்களுக்காக உங்கள் சொந்த மாநிலத்தின் மக்களை ஒடுக்கும் போக்கு எந்தவொரு மனிதாபிமான அணுகுமுறைக்கும் எதிரானது, என்னால் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். ஆனால், டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள முதியவர்களுக்கு சேவை செய்வதிலிருந்து அரசியல் சுவர்கள் என்னைத் தடுக்கின்றன," என்றும் பிரதமர் மோடி கூறினார்.


“என்னை சகோதரியாகத்தானே பார்த்திருக்கணும்.. பொறாமைப்படுறீங்களே?” விஜய் மாநாட்டு தொகுப்பாளர் கவிபாரதி துர்கா பதிலடி..