Rahul Gandhi : வெடிகுண்டை போட்ட ராகுல்...ஆதாரம் கேட்ட சபாநாயகர் ஓம்.பிர்லா! கொந்தளித்த பாஜக எம்.பி.க்கள்

Rahul Gandhi :நம்முடைய 4000 சதுர கிலோமீட்டர் நிலத்தில் சீனர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று ராகுல் தெரிவித்தார்

Continues below advertisement

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் கரசாரமாக நடந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து பேசினார்.  

Continues below advertisement

ராகுல் பேச்சு:

ராகுல் காந்தி தனது உரையில் பேசியதாவது ”தற்போது நான் நம் தேசத்தின் பாதுகாப்பு குறித்து பேச விரும்புகிறேன். பிரதமர் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறார் ஆனால் இந்திய ராணுவம் பிரதமர் கருத்திற்கு மாறான கருத்தை சொல்கிறது. இது முற்றிலும் உண்மை ஆனால் பிரதமர் மோடி இதனை மறுத்து வருகிறார்.. ஆனால் இந்திய ராணுவம் பிரதமரின் கருத்தில் உடன்படவில்லை.. நம்முடைய 4000 சதுர கிலோமீட்டர் நிலத்தில் சீனர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று ராகுல் தெரிவித்தார். 

இதையும் படிங்க: மொத்தமா மாறும் வடசென்னை.. இனி நல்ல காலம்தான்.. பக்கா பிளான் ரெடி..!

நாடாளுமன்றத்தில் கொந்தளித்த பாஜக எம்பிக்கள்: 

ராகுலின் பேச்சுக்கு வெகுடெழுந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு..

"மனதில் தோன்றுவதை எல்லாம் பேசும் இடம் நாடாளுமன்றம் இல்லை" இது முற்றிலும் தவறான செயல் 
உங்களால் இந்திய வெளியுறவுத்துறை கொள்கை, தேசிய எல்லை பாதுகாப்பு குறித்து எல்லாம் எப்படி இப்படி விளையாட்டாக பேச முடிகிறது "இது மிக முக்கியமான விவகாரம்" என்றார்.

இந்த வாக்குவாதத்திற்கு இடையே குறுக்கிட்ட சபாநாயகர்..

"நீங்கள் சொல்லும் விஷயத்திற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும்" என  சபாநாயகர் ஓம் பிர்லா ராகுல் காந்தியிடம் கேட்டார்.

தொடர்ந்து பேசிய கிரண் ரிஜ்ஜூ மக்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனைத்து உரிமையும் உள்ளது .ஆனால் இது போன்ற முக்கிய விவகாரங்களில், மனம் போன போக்கில் பேசாதீர்கள் என்று கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

ராகுல் பதில்:

இதற்கு பதிலளித்த ராகுல், “தேசத்தின் முக்கியமான பிரச்சனைகளை இப்படி பேசாதீர்கள். சீனா இந்தியாவிற்குள் நுழைந்து விட்டது என்பதை பிரதமர் மோடி மறுத்துவிட்டார். இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துவிட்டது. ஆனால் சில காரணங்களுக்காக நம்முடைய ராணுவம் தொடர்ந்து சீன ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்திய ராணுவத்தின் தலைமை, சீனா இந்தியா எல்லைக்குள் நுழைந்துள்ளதை உறுதி செய்துள்ளது இதுதான் உண்மை.. எந்த காரணத்திற்காக சீனா இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது என்பது முக்கியமானது.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு ஜாக்பாட்! ரயில்வே திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கிய மத்திய அரசு! எவ்வளவு கோடி தெரியுமா?

அந்த போர் அல்ல இது:

”மக்கள் நினைக்கிறார்கள் போர் என்பது ராணுவத்திற்கும், ஆயுதங்களுக்கும் இடையே நடப்பது என்று ஆனால் உண்மை என்னவென்றால், தொழில்துறை அமைப்புகள் தான் போருக்கான காரணம். சீனாவின் தொழில்துறை அமைப்பு மிகவும் வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது.நம்முடைய தொழில்துறை அமைப்பை விட பல மடங்கு பெரியது.அதனால் தான் நம் நாட்டிற்கு நுழையும் தைரியம் அவர்களுக்கு வந்துவிட்டது. சீனா இந்தியாவிற்குள் நுழைந்ததற்கான ஒரே காரணம் Make IN இந்தியா திட்டம் தோல்வி அடைந்து விட்டதால் தான்.  இந்தியாவால் தயாரிப்புகளை உருவாக்க முடியவில்லை.”

”அதனால் தான் சீனாவால் இங்கே நுழைய முடிகிறது. இந்த முறையும் இந்தியா தன்னுடைய புரட்சியை சீனாவிடம் வழங்க உள்ளது, நான் இதை சொல்வதற்கு காரணம் இந்த அனைத்து விவகாரங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது.ஒருவேளை சீனாவுடன் இந்தியாவிற்கு போர் ஏற்பட்டால் சீன இயந்திரங்கள், சீன பேட்டரிகள், ஆகியவற்றை பயன்படுத்தி தான் சீனாவிடம் போரிட முடியும்”

”சீனாவிடம் இருந்து தான் இந்தியா இது அனைத்தையும் வாங்க வேண்டும் அதனால்தான் சொல்கிறேன் நம்முடைய பாதுகாப்பிற்காகவும், நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும்.. நாம் ஒரு சிறந்த உற்பத்தி மையத்தை உருவாக்க வேண்டும், தற்போதைய எழுச்சி அப்படியே மறைந்துவிட நாம் விட்டுவிடக்கூடாது . அடுத்ததாக நம்முடைய தந்திர கூட்டாளியாக இருக்கிறது அமெரிக்கா. இருவரும் எப்படி முன்னேறலாம் என்பதை யோசிக்க வேண்டும்  இந்தியர்கள் இல்லாமல் அமெரிக்காவால் சிறந்த தயாரிப்புகளை உருவாக்க முடியாது. அமெரிக்கா நினைச்சு பார்க்க முடியாததை இந்தியாவால் செய்ய முடியும்  இது குறித்து தான் நாம் இளைஞர்களிடம் பேச வேண்டும். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நாளை சீனாவை எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும், என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ”

Continues below advertisement