சட்டசபை தேர்தலை விஜயகாந்தின் தே.மு.தி.க. தினகரனின் அ.ம.மு.க.வுடன் இணைந்து சந்திக்க உள்ளது. மொத்தம் 60 தொகுதிகளில் போட்டியிட உள்ள தே.மு.தி.க.வின் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. 
ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் நேற்று திடீரென மாற்றப்பட்ட நிலையில், கரூர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ரவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கஸ்தூரி என்.தங்கராஜ் போட்டியிடுவார் என்று காலையில் கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.


இந்த நிலையில், விஜயகாந்த்  சற்று முன் வெளியிட்ட அறிவிப்பில், பரமக்குடியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சந்திரபிரகாஷிற்கு பதிலாக செல்வி போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார். ஒரே நாளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் இருவர் அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ள சம்பவம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.