தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இடைக்கால பொது செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளரும், சி.வி.சண்முகம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர்  குமரகுரு தலைமையில் வரவேற்பு  அளித்தனர்.


அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு:


இன்றைய தினம் கழகத்திற்கு ஒற்ற தலைமை வேண்டும் என உங்கள் குரல் ஒலித்தது உங்கள் குரல் ஒளியின் காரணமாக ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டு கழக இடைக்கால பொதுச் செயலாளர் உங்கள் பெரு ஆதரவோடு பயணங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில பேர் நம்முடைய இயக்கத்தில் இருந்து கொண்டு அதிமுகவை அளிக்க வேண்டும் என்று செய்த சதியினால்தான் கடந்த காலத்தில் நம்மால் ஆட்சி பிடிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு யார் யாரெல்லாம் ஆட்சிக்கு வருவதற்கு தடையாக இருந்தாரோ அந்த தடை கற்கள் எல்லாம் உடைத்து எரிக்கப்பட்டது.




தமிழகத்தை ஆட்சி செய்து வரும் ஸ்டாலின் கழகத்தை முடக்க பார்க்கிறார். இன்றைக்கு நமது துரோகிகளோடு சேர்ந்து கொண்டு எம்ஜிஆர் மாளிகையை சீல் வைத்திருக்கின்றார்கள். தமிழகத்தில் அதிக முறை ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அனைத்திந்திய முன்னேற்றக் கழகம் தான் 31 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அதேபோல் தமிழகத்தின் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருந்ததும் அதிமுக தான். தற்பொழுது தமிழகத்தில் நடைபெற்று வருவது திமுகவின்  சட்ட ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சியாகும். நமது எதிரிகள் ஆனா திமுகவுடன் கைகோர்த்து கழகத்திற்கு துரோகம் செய்த பன்னீர்செல்வம் திமுகவின் B டீமாக செயல்படுகிறார். எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அதிமுகவை சில துரோகிகள் அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து விடுவார்கள்.


இலங்கையில் குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் எப்படி அந்த நாட்டு மக்களின் எதிர்ப்பால் நாட்டை விட்டே வெளியேறினார்களோ. அதே போல் விரைவில் இந்த திமுகவினரும் செல்வார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் தொண்டர்களால் ஆன கட்சி, தொண்டர்கள் நினைத்ததால் நான் தற்பொழுது இடைக்கால பொது செயலாளராக ஆனேன். எனக்காக காத்திருந்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி.




குடும்பம்தான் கட்சி; கட்சிதான் குடும்பம். நம்முடைய அதிமுக தலைவர்களுக்கோ மக்கள்தான் குடும்பம். மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்கள் அவர்கள். திமுக குடும்பத்துக்காக ஆட்சிசெய்து கொண்டிருக்கிறது. வாரிசு அரசியல் செய்கிறார்கள். ஏதோ மன்னர் பரம்பரை போல கருணாநிதி, அதற்குப் பிறகு ஸ்டாலின், அடுத்தது உதயநிதியும் முளைத்துவிட்டார். மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்பட்ட கட்சி அதிமுக. ஆனால், வீட்டு மக்களுக்காக அரசாங்கம் செய்யும் கட்சி திமுக., மீண்டும் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர நாம் இரவு, பகல் பார்க்காமல் உழைக்க வேண்டும். தேனீக்கள், எறும்புகளைப் போல் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண