திமுகவில் முதல்வர் பொறுப்புக்கு சண்டை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். கரூரில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார நிகழ்ச்சியில் பேசியதாவது: காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் கடந்த ஜூன், 28 இல் தொடங்கி தொடங்கியது. வரும் ஜூலை, 31 இல் சென்னையில் நிறைவு பெறுகிறது. இந்துக்கள் சார்பில், பள்ளி, கல்லூரிகள் துவக்க வேண்டும் என்றால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினாலும், அனுமதி பெற லஞ்சம் தர வேண்டிய நிலை உள்ளது.




ஆனால், கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் பள்ளி, கல்லூரி தொடங்க கட்டடம் கட்டி விட்டு கடிதம் கொடுத்தால் போதும், அனுமதி தந்து விடுகின்றனர். அந்த உரிமை இந்துக்களுக்கு மறுக்கப்படுகிறது. சட்ட விரோதமாக பல இடங்களில், சர்ச்சுகள் செயல்படுகின்றன. புகார் தெரிவித்தாலும், தி.மு.க., அரசு கண்டு கொள்வதில்லை. பள்ளி, கல்லூரிகளில் கிறிஸ்தவர், இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால்,  இந்து மக்கள் இந்து மாணவர்களுக்கு வழங்குவதில்லை. கோவில்களில் இருந்து, தமிழக அரசு வெளியேற வேண்டும். தமிழக கவர்னர், பல்கலை விவகாரங்களில் சட்டரீதியாக செயல்படுகிறார். அதில், தவறு இல்லை. கோவில்களுக்கு சொந்தமான, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. அதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அந்த விஷயத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.




 கோவில் நிலங்களை, போலியான பத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 150 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள கோவில் விவகாரத்தில், இந்துக்களுக்கு எதிராக தி.மு.க., அரசு செயல்படுகிறது. அந்தப் பகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ., கூட, முதல்வருக்கு தவறான தகவல்களை தந்துள்ளார். அது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் உடல் நலம் தேறி, மீண்டும் மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஆனால், முதல்வர் பொறுப்புக்கு தி.மு.க.,வில் சண்டை ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.




மகாராஷ்டிராவில் நடந்தது போல, தமிழகத்திலும் நடக்க வாய்ப்புள்ளதாக, தி.மு.க., வினரிடம் இருந்தும், உளவு துறையினரிடம் இருந்தும் தகவல் வருகின்றன. அ.தி.மு.க., ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, இந்து முன்னணி எதிர்பார்த்தது. ஆனால், காலம் கடந்து விட்டது. அ.தி.மு.க.,வில் நடந்து வரும் சம்பவங்கள் வருத்தமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண