பிரதமரிடம் தான் பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம்.
நயினார் நாகேந்திரன் பேட்டிக்கு - பதில் அளித்த ஓ.பி.எஸ்
”மோடியை சந்திக்க என்னிடம் சொல்லியிருந்தால் நான் அனுமதி வாங்கி தந்திருப்பேன். ஓ.பி.எஸ்., வெளியேற்றம் பலவீனமா என்பது தேர்தலில் தான் தெரிய வரும்”. - என மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இந்த சூழலில் இன்று மதுரை வந்த ஓ.பி.எஸ்., பிரதமரிடம் தான் பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை வெளிப்படையாக காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியதியுள்ளது.
மதுரை வந்த ஓ.பி.எஸ்.,க்கு உற்சாக வரவேற்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவருக்கு அவரது, தொண்டர்கள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டதாகவும் அதற்கு அனுமதி வழங்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்.
நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறிஞ்செய்தியை காண்பித்த ஓ.பி.எஸ்.,
இந்தநிலையில் இதனை மறுத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்னிடம் சொல்லி இருந்தால் சந்திக்க வைத்திருப்பேன். என நேற்று மதுரையில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பினர் மறுப்பு தெரிவித்த நிலையில், இரண்டு முறை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் காண்பித்தார். நயினார் நாகேந்திரன் தனக்கு தகவல் கொடுத்திருந்தால் சந்திக்க வைத்திருப்பேன் என தெரிவித்ததற்கு மறுப்பு தெரிவித்து ஆதாரத்தை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார்.