அஇஅதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அப்பொழுது அவர், அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக மாற்றினார் எம்ஜிஆர். அவர் தொடங்கிய இந்த அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், ஒன்று பட்டால் ஜனநாயக ரீதியால் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வெல்ல முடியாது. எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகளால் அதிமுகவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மனகசப்பை மறந்து எல்லாரும் அதிமுகவில் மீண்டும் எல்லாரும் இணைய வேண்டும். நடந்தவைகள் நல்லதாவே நடக்கும், மீண்டும் ஒன்றுப்பட்டு ஆட்சியை பிடிப்பதே நோக்கம். 


அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து அதிமுகவை நன்றாக வழிநடத்தினோம். அதேபோல், அதிமுகவில் இரட்டை தலைமை என்பதெல்லாம் பிரச்சனை இல்லை. கூட்டு தலைமையாக செயல்படுவோம். மேலும், ஒன்றிணைந்து செயல்படலாம் என சசிகலா மற்றும் டிடிவிக்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ். 






புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா பல தியாகங்கள் செய்து அதிமுகவை வளர்த்து எடுத்தனர். அதேபோல், மீண்டும் அதிமுக கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பொறுப்பை, மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு அனைவரும் உறுதியாக நின்று ஒருமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. 


அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் இருந்த பிரச்சனையால் அதிமுகவின் 1.30 கோடி தொண்டர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் நாங்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள். பல பகுதிகளில் இருந்து அந்த செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அதன் காரணமாக இதற்கு முன்னாள் ஏற்பட்ட அனைத்து கசப்பான விஷயங்களை மறந்து மீண்டும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண