சில பல அரசியல் காரணங்களுக்காக கடந்த சட்டமன்ற தேர்தலில் 1% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை இந்த உள்ளாட்சி தேர்தலில் மீட்டு அதிமுகவை அசைக்க முடியாது என்ற நிலையை உறுவாக்குவோம். இங்குள்ள அமைச்சர் துரைமுருகன், எம்.ஜி.ஆரை நம்பியை துரோகி என நா கூசாமல் பேசுகிறார் அவருக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். கூட்டத்தில் உள்ளவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்க்காக அவதுராக பேசக்கூடாது. யார் நம்பிக்கை துரோகி என்பதை துரைமுருகன் உணர வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மூச்சு திணறி மயக்கம் போடும் நிலையில் திமுக ஆட்சி திணறிக்கொண்டுள்ளது- காட்பாடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஓ.பி.எஸ் பேச்சு.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னால் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,
அதிமுக தொண்டன் என சொன்னால் தமிழக மக்களிடம் பெரும் மரியாதை உள்ளது. இது எந்த கட்சிக்கும் கிடையாது. திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. ஆட்சி காட்சி பொருளாக மாறியுள்ளது.
இந்த பகுதியை சேர்ந்த அமைச்சர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன் எம்.ஜிஆரை பற்றி நா கூசாமல் அவதுறாக பேசியுள்ளார். அவருக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
"மாமரத்தில் உள்ள ஒரு கனி பழுத்து கிழே விழுந்தது அதை எடுத்து என் இதயத்தில் வைத்துகொண்டேன், எம்.ஜி.ஆர் என் இதயக்கனி என சொன்னாரே அண்ணா அவர் நம்பிக்கை துரோகியா?
1967 திமுக வெற்றி பெற்ற போது அண்ணாவை எல்லோரும் வாழ்த்த சென்ற போது இந்த வெற்றிக்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் காரணம் அவரை போய் வாழ்த்துங்கள் என சொன்னாரே அண்ணா, அவர் நம்பிக்கை துரோகியா?
ஏன் துரைமுருகனை படிக்க வைத்து பட்டதாரி ஆக்கினாரே, துரைமுருகன் துரோகியா? திரைப்படங்கள் மூலம் திராவிட கொள்கைகளை பரப்பி திமுக ஆட்சிக்கு வர காரணமானர் எம்.ஜி.ஆர், இவர் நம்பிக்கை துரோகியா?ஆக மேடையில் எல்லாரும் சிரிக்க வேண்டும் என்பதற்க்காக நா கூசாமல் பேசக்கூடாது. ஆகவே மீண்டும் துரைமுருகனுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் நாம் பெறும் வெற்றி அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அதற்க்கு அடித்தளமாக இந்த தேர்தல் அமைய வேண்டும். அடுத்த சில மாதங்களில் நகராட்சி தேர்தல் வருகிறது. அதிலும் அதிமுக வெற்றிவாகை சூடுவோம். சில பல அரசியல் காரணங்களுக்காக கடந்த சட்டமன்ற தேர்தலில் 1% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
சமூதாய சீர்த்திருத்தத்தீற்க்காக வழ்ந்தவர் தந்தை பெரியார், தமிழகம் தலைநிமிர வாழ்ந்தவர் அண்ணா, தாய்மார்கள் நலனுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர், இவை அனைத்தையும் ஒருங்கே வைத்து செயல்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டுகால ஆட்சியில் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் திட்டத்தை அடிபிரழாமல் செய்தார். அதை யாராலும் மறுக்க முடியாது.
கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் வாய்க்கு வந்த இல்லாதது, பொல்லாதது என ஆகாச பொய்யை எல்லாம் சொல்லி வெற்றி பெற்றது திமுக. ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மூச்சு திணறி மயக்கம் போடும் நிலையில் திமுக ஆட்சி திணறிக்கொண்டுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.