முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் பொய்யான தகவல்களை பரப்பியதாக எதிர்கட்சிதலைவர் குற்றம் சாட்டி உள்ளார்
கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, “ முதலமைச்சர் ஸ்டாலின் சேலத்தில் பொய்யான தகவல்களை பரப்புகிறார். அதிமுக ஆட்சியில் சேலத்தில் திட்டங்கள் எதுவும் செய்யப்பட வில்லை என முதல்வர் கூறுவதில் உண்மை இல்லை என்று கூறியதோடு, தொகுதிக்கு அதிமுக செய்த திட்டங்களை பட்டியலிட்டு விளக்கம் கொடுத்தார்.
செவிடன் காதில் ஊதிய சங்கு
தொடர்ந்து பேசிய அவர், “ அதிமுக – பாஜக உறவில் எந்த விரிசலும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களோடு நில அபகரிப்பும் சேர்ந்து வந்துவிடும். எங்கேயாவது ஏமாந்தவர்கள் இருந்தால் அந்த நிலத்தை அவர்கள் அபகரித்து விடுவார்கள். அதுதான் அவர்களின் தொழில். எல்லா துறைகளிலும் ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது.. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து கொள்ளை புறம் வழியாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ போலதான் இந்த அரசு செயல்படுகிறது.” என்றார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஜெயலலிதா இருக்கும் போதும் ஏராளமான திட்டங்கள் தந்தார். அவரது மறைவுக்கு பிறகும் ஏராளமான திட்டங்கள் தரப்பட்டுள்ளன. சமீபத்தில் சேலம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் எந்த திட்டங்களும் செய்யப்படவில்லை என்றும், குறிப்பாக எடப்பாடி தொகுதியில் எந்த திட்டமும் செய்யவில்லை என கூறி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 ஏரிகள் நிரம்பும்படியான மேட்டூர் உபரிநீர் திட்டம் தந்து, அதிமுக ஆட்சியில் அதில் ஒரு பகுதி முடிக்கப்பட்டு விட்டது. திமுக பொறுப்பேற்ற பின் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். இது ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றார். பின்தங்கிய எடப்பாடி தொகுதிக்குள் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஜெயலலிதா இருக்கும்போது தரப்பட்டது. எனது தலைமையிலான ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் மட்டும் பாலிடெக்னிக் கல்லூரி, பிஎட் கல்லூரி தந்தோம். நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. கால்நடை மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையங்கள் தந்தோம். எடப்பாடி நகரத்தில் 30 வார்டுகளிலும் கூட்டு குடிநீர்தந்தோம். நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் தந்தோம். வணிகவளாகம், பாலங்கள், பூங்கா, நியாயவிலை கடைகள், எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை, தீயணைப்பு நிலையங்கள், தரமான சாலைகள், 16 பேருந்துகள் தந்துள்ளோம் என பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி, வேண்டும் என்றே என்மீது தவறான, பொய்யான தகவலை ஸ்டாலின் கூறியது கண்டிக்கத் தக்கது என்றார். கடலூர் மாவட்டத்தில் ஆற்றல் மூழ்கியதில் விலைமதிப்பில்லா உயிர்களை இழந்துள்ளோம். மணல் அள்ளியதால் அங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
இது எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியதுடன், இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தாலே நில அபகரிப்பும் வந்துள்ளது. அது அவர்களின் தொழிலாக உள்ளது என்றார். அதுமட்டுமல்லாமல் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தங்குதடையில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன இதனை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத நிலையில் உள்ளது. எந்த திட்டங்களையும் திமுகவால் செய்யமுடியவில்லை. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திசைதிருப்புகின்றனர் என்றார். திமுக வாக்குறுதியை நம்பி நகை அடகு வைத்தவர்கள், கல்வி கடன் வாங்கியவர்கள் ஏமார்ந்துவிட்டனர் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, விலைவாசி உயர்வுக்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வே என்றார். மத்திய அரசு இரண்டுமுறை விலைகுறைப்பு செய்தபின்னும், திமுக தேர்தல் வாக்குறுதிபடி விலை குறைப்பு செய்யவில்லை என்று சுட்டிகாட்டினார். அரசு ஊழியர்களுக்கு பழை ஓய்வூதிய திட்டம் என்ன ஆனது, அகவிலைப்படிகூட கொடுக்கமுடியவில்லை.
கடந்த ஓராண்டு காலத்தில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றியதாக விளம்பரம் செய்கின்றனர். இதற்கு ஊடகங்களும் உடந்தையாக உள்ளன. திமுக தேர்தல் நேரத்தில் கூறியபடி நீட் தேர்வு ரத்து என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுக ஆட்சியில் செய்ததையேதான் இவர்களும் செய்கின்றனர் என்றார். திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவிவருகிறது என்று கூறிய அவர், இந்தியாவுக்கே தமிழகம்தான் முதன்மை மாநிலம் என்று ஸ்டாலின் கூறுகிறார். அனைத்து தெறைகளும் முடங்கி விட்டன. ஊழலில்தான் தமிழகம் முதன்மையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட வேண்டாம் என டிஜிபியே கூறுகிறார். இந்த விளையாட்டில் முதலில் பணம் வரும், பின்னர் தற்கொலை செய்துகொள்ள சூழல் ஏற்படும் என்று கூறுகிறார். ஆனால் இந்த விசயத்தில் தமிழக அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது என்றார். எடப்பாடி தொகுதியில் விசைத்தறி பாதிக்கப்பட்டுள்ளது. குருநாதா காலத்தை கடந்து வந்த நிலையில் தற்போது நூல் விலை ஏற்றத்தால் நெசவாளர்கள் மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்கவேண்டும் என சட்டமன்றத்தில் பேசினேன். சென்னைக்கு வந்த பிரதமரிடமும் இதுகுறித்து வலியுறுத்தி உள்ளேன். ஆனால் முதலமைச்சரோ வருமானம் வருவது தொடர்பான கோரிக்கையைதான் பிரதமரிடம் முன் வைத்தார். மக்கள் பாதிப்பிற்குள்ளாகும் கோரிக்கை பற்றி பேசவில்லை.