இன்று மேற்கு வங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக நியமித்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்குப் பதில் இனி மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. 










மாநில முதல்வரை அரசு பல்கலைக்கழகங்களில் வேந்தராக நியமித்தது மட்டுமின்றி, தனியார் பல்கலைக்கழகங்களில் வருகையாளராக மாநில ஆளுநருக்கு இருந்த அதிகாரங்களை நீக்கிய மேற்கு வங்க அமைச்சரவை, ஆளுநருக்குப் பதில் இனி மாநிலக் கல்வித் துறை அமைச்சர் தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையாளராக இருப்பார் எனவும் உத்தரவிட்டுள்ளது. 



மேற்கு வங்க மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இனி அம்மாநில முதல்வரே வேந்தராக இருப்பார். இது விவசாயம், மருத்துவம் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும். 






இந்தத் தீர்மானத்தை வரும் ஜூன் 10 அன்று தொடங்கும் மேற்கு வங்கச் சட்டமன்றத்தின் பருவ கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண