சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான 2 வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்  அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ,  சென்னை  மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார்  மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் , சென்னை குடிநீர் வாரியம் இயக்குநர் வினய் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.


இந்த ஆய்வு கூட்டத்தில் தென் சென்னை , மத்திய சென்னை , வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஏற்கனவே கடந்த 16 தேதி எம்.பி, எம்.எல்.ஏக்கள் சார்பாக கேட்கப்பட்ட 100 கேள்விகளுக்கு இன்று அதிகாரிகள் பதிலளித்தனர்.


சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் மழை நீ்ர் வடிகால் குறித்தான கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் எனவும் துறை சாரந்த அதிகாரிகள் பதில் அளிப்பார்கள் எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.


சென்னையில் கடந்த  ஆண்டு மழையின் போது  மின்வெட்டு தொடர்பாக அதிகம் புகார்களாக வந்தது அதற்கு என்ன செய்ய உள்ளோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மின்வாரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.


அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் 5 ம் தேதி அனைத்து பணிகளும் நிறைவுப்பெறும் என அதிகாரிகள் பதில் அளித்தனர்.


கடந்த ஆண்டுகளில் வெள்ள நீரை வெளியேற்றும் இயந்திரங்கள் , 100 HP மோட்டார்கள் இறுதி நேரத்தில் தான் வருகிறது. அதனால் பணியில் சுணக்கம் ஏற்படுவதாக வில்லிவாக்கம் எம்.எல்.ஏ  குற்றச்சாட்டை முன் வைத்தார்.


இந்த முறை முன்கூட்டியே தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்கிறோம் என மாநகராட்சி ஆணையர் பதில் அளித்தார். மேலும் மெட்ரோ சுரங்கத்திற்கு மழை நீர் போகாத வகையில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளது.பம்பிங்க் ஸ்டேஷன் சர்வீஸ் செய்யப்பட்டு தயார் நிலை உள்ளது.


மழை நீர் வடிகால் அடைப்புகளை மீண்டும் வரும் 10 தேதி முதல் தூர்வாரப்படும் என ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடம் சரமாரியாக கேள்விகளை எம்.பிகள் தொடுத்தனர்.


ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் பேசும்போது


மழை காலங்களில் மக்களுக்கு ஆவின் பால், மளிகை பொருட்கள், ரொட்டி உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை கொடுப்பதற்காக கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் மழைக்காலத்திற்கு முன்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், மின்சாரம் இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.


மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது ; 


மக்களை சந்திக்கும் போது மக்கள் எங்களை தான் கேள்வி கேட்பார்கள். மழை பெய்யும் போது ஏற்படும் வெள்ளம் தானாக போய்விடும் நாம் என்ன செய்ய உள்ளோம்.


டெண்டர் முறையில் பணியாற்றும் போது வெள்ளத்திற்கு முன்பாக பணிகளை செய்ய வேண்டும். ரெட்டேரி மற்றும் கொசஸ்தலையில் வெள்ளம் வரும் போது அதிக பகுதிகள் பாதிக்கப்படுகிறது.


நேற்றை மழை ஒரு பாடம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதை போல எந்த இடத்தில் மழை தேங்கி உள்ளது. எந்த சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது என்பதை முன்தாக கண்டறிய வேண்டு்ம்.  அக்டோபர், நவம்பர் மாதம் செய்ய வேண்டிய மழை ஆக்ஸ்ட், செப்டம்பர் மாதமே பெய்து வருகிறது.


மிக்ஜாம் புயல்  வெள்ளத்தின் போது மக்களுக்கு ஒரு எண்ணம் உள்ளது மழை வந்தாலே அது வெள்ளமாக தான் இருக்கும் என நினைக்கிறார்கள்.  வர்தா புயலின் போல் காற்று வீசினால் அதற்கு தயாராக உள்ளோமா என்பது தான் கேள்வி என தெரிவித்தார்.  மாநகராட்சி எதும் செய்யவில்லை என சொல்லவில்லை அனைத்திற்கும் நாம் தயாராக உள்ளோமா என்பது தான் முக்கியம் என தெரிவித்தார்.


கூவத்தில் மனித கழிவு அதிகமாக உள்ளது. அதை தூர்வாரி காய வைத்து உரமாக மாற்றிலாம் அது குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் கூவத்தில் உள்ள  அடைப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தார். மக்கள் வேலை நடப்பதை பார்க்கிறார்கள் நீங்கள் வேலை செய்யவில்லை என கூறவில்லை கொஞ்சம் சீக்கரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் மின்சாரம் இல்லாத போது வெளிநடப்புகள் அனைத்தும் தடையாக உள்ளது, என்ன நடப்பது என்றே தெரிவதில்லை, ஆகையால் எப்போது தண்ணீர் வெளியேற்றப்படும், மின்சாரம்  மீண்டும் நேரம், பால் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது குறித்து ஒலி பெருக்கி மூலம் தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது


பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதியில் மொத்தமாக 17 நீர்வழிக் கால்வாய்கள் தூர்வாரமல் உள்ளது. கொட்டிவாக்கம் பகுதி மற்றும் ஒ.எம்.ஆர் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் சுத்தம் செய்ய வேண்டு்ம் எனவும் ஒக்கியம் பகுதியில் மணல் மேடாக உள்ளது என்ற கோரிக்கைகளை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழிச்சி தங்கபாண்டின் தெரிவித்தார்.


வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வைத்த கோரிக்கைகள் ;


விம்கோ நகரில் மெட்ரோ அதிகாரிகள் யாரும் வருவதில்லை எனவும் கழிவு நீர் கால்வாய்கள் முழுமையாக இல்லை என தெரிவித்தார். விக்கோ நகரில் மழை காலங்களில் போது உயர்மட்ட பாலத்தில் இருந்து வெளியேறும் நீர் மிக வேகமாக வெளியேறுவதால் அந்த சாலையில் செல்லக்கூடிய இரு சக்கர வாகன ஓட்டிகள் சீரமம் அடைந்து வருகிறார்கள் என தெரிவித்தார்.


அதிகாரிகள்


பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறையின் சாலையை பயன்படுத்தி  அமைப்பதற்காக அனுமதி பெற வேண்டும். அதற்கு அனுமதியை கடந்த 30ஆம் தேதியே பெற்று விட்டதாக அமைச்சர்  உதயநிதியிடம் பொய்யான தகவல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும், ஆனால் நேற்று தான் அது சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏன் என்னிடம் பொய்யான தகவலை தெரிவித்தார்கள் என கேட்டார், அதற்கு அதிகாரிகள் விழி பிதிங்கி, கை பிசைந்து நின்றனர்.


பின்னர் இந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது


மழை காலங்களில் மின்வாரிய பணிகள் மிகவும் அவசியமானது. மழைநீர் வடிகால் பணிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.


நிதி பற்றாக்குறை காரணமாக பருவமழை முன்னெச்சரிக்கை  பணிகளில் தொய்வு ஏற்படுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சென்னையை பொறுத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்குதான் முக்கியத்துவம் வழங்க வேண்டும். சேதமடைந்த கட்டிடத்தில் குடியிருக்கும் மக்களை மழைக்கு முன்பாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்


மழை நீர் வடிகால் கழிவு நீர் அடைப்புகளை அகற்ற கோரிக்கை வைத்துள்ளனர் அதில் எந்த சமரசமும் இல்லாமல் செயல் படுத்த வேண்டும்


அதிகாரிகள் ஆய்விற்கு செல்லும் போது சட்ட மன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து செல்ல வேண்டும்


சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தங்கள் தொகுதி மேம்பாடு நிதியை மழை நீர் வடிகால் ,கழிவு நீர், அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதிகளை மழைநீர் வடிகால் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.


மழைநீர் வடிகால் பணிகளை மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆய்வு செய்ய உள்ளோம்.


மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து முதல்வர் அமெரிக்காவில் இருந்த போதும் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து வருகிறார் என தெரிவித்தார்.


மழை கால பணிகளுக்கு தான் முன் உரிமை அளிக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டு்ம்.


மெட்ரோ பணி பல இடத்தில் நடைபெற்று வருகிறது. மழை நீர் வடிகால்வாய் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். நேற்று இந்த ஆய்வு கூட்டம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். இது ஆய்வு கூட்டம் குறித்து முதல்வருக்கு அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்தார்.