அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில்அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்பதற்காக மாவட்டம் வாரியாக மூத்த நிர்வாகிகள் சென்று ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்சி வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி.யும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, மாவட்டத்தில் அதிக தொண்டர்களை திரட்டி வருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே. பி.முனுசாமி பேசியது.. வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எழுச்சி பொன்விழா மாநாடு நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி ஆணை பிறப்பித்தார்.




மேலும், மாநாட்டின் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி அவர்கள் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநாட்டிற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி கடந்த 28 ஆம் தேதியில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை ,விருதுநகர், தூத்துக்குடி, தேனி , மதுரை, திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டங்களில் செயல்வீரர், செயல் வீராங்கனை கூட்டங்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய அதிமுக தொண்டர்கள் எவ்வாறு வர வேண்டும் ,எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.  ஆகையால் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் இருந்து 13 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியாக இருக்கிறார்கள் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார்கள். 


அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அதிமுகவில் நிரப்பப்படாத இடங்கள், குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பதிவுகளை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை என்பது அதிமுகவின் தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும்  செல்வி. ஜெயலலிதா அவர்களை பக்தியோடு அரவணைக்கும் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் மையப்பகுதியாக இருக்கக்கூடிய பகுதி என்பதால் அங்கு மாநாடு நடத்துகிறோம். 




மேலும், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அவர்கள் இணைந்து  ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அரசியல் ரீதியாக இருவரும் அனாதையாக ஆகிவிட்டார்கள். ஓ. பன்னீர்செல்வம் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு தர்மயுத்தத்தை தொடங்கினார். அந்த தர்ம யுத்தத்தில் நானும் இருந்தேன்.மேலும்  ஒவ்வொரு முறை மேடையில் சொல்லும் போதும் செல்வி .ஜெயலலிதா அவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என தெரிவித்தார். ஆகையால் அதை தீர விசாரிக்க வேண்டும் என தனியாக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த சந்தேகம் யார் மீது உள்ளது என தெரிவித்தார்,  என்றால் சசிகலா மீது  தெரிவித்தார். ஆனால் தற்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று சொல்கிறார். உண்மையில் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆனால் அவர் கூறிய பின்பு அவர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டும்  எண்ணமும் எங்களுக்கு இல்லை. அன்று அவர் பதவிக்காக குற்றம் சாட்டினார். ஆனால் இன்று யார் மீது குற்றம் சாட்டினாரோ அவர்களை அரசியல் நினைத்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறார். எவ்வளவு கீழ் தனமான அரசியல் சிந்தனை என்று புரிந்து கொள்ளுங்கள். இன்று போராட்டம் நடத்திய டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அவர்கள் இணைந்து திமுகவை எதிர்த்து தான் போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை, என கூறி உண்மையான அதிமுக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம். ஓ பன்னீர்செல்வம் கால் புணர்ச்சியுடன் இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்.




அரசியல் காட்டுணர்ச்சியால் எங்கேயோ நடந்த குற்றங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி சுமத்த வேண்டும் என்ற நோக்கோடு இதுபோன்ற செயல்களில் கீழ்த்தனமாக ஈடுபட்டு வருகிறார்.  ஓ. பன்னீர்செல்வம் யார் என்று மக்களுக்கு அடையாளம் காட்டியது அதிமுக தான். ஆனால் அனைத்தையும் மறந்து விட்டு எதிரிகளுடன் கூட்டணி வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை பற்றி பேசுவதே எங்களுக்கு அசிங்கமாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேற்று சசிகலா மற்றும் தினகரன் எதிரி. ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி எதிரி அவர்கள் நண்பர்கள். ஓபிஎஸ் அவர்கள் நேரத்துக்கு நேரம் தன்னை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியாக செயல்படுவதாக சூசனமாக தெரிவித்தார்.


மேலும் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு 30 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலங்களை கையகப்படுத்துவதில் நாங்கள் முனைப்போடு ஈடுபட்டு வருகிறோம். NLC பிரச்சனையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிவர்மன் முன்னின்று இதுவரை போராட்ட களத்தில் மக்களுக்கு ஆதரவாக போராடி வருகிறார்.