காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்

 

ஆடி மாதம் என்றால் அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில், கோவில் நகரமாக விளங்கி வரும் காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள மிக முக்கிய, சக்தி பீடங்களில் ஒன்றாக "காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் " விளங்கி வருகிறார். வெள்ளிக்கிழமைகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். காஞ்சிபுரம் தவிர பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தினமும் தரிசித்து வருகின்றனர். ஆடி மாதம் நடைபெற்று வருவதால் , தினமும் வழக்கத்தை விட அதிக அளவு பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்று வருகின்றனர்.



 

 சந்தன காப்பு அலங்காரம்

 

இந்தநிலையில் நேற்று ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் அம்மனுக்கு செய்யப்பட்டது. ஆடி மாதத்தில், வரும் பௌர்ணமி என்பதால், நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், தங்க ரத உற்சவமும் நடைபெற்றது. தங்கத்தேரில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதே போன்று நேற்று செவ்வாய்க்கிழமையில் ஆடி பவுர்ணமி வந்ததால் கூடுதல் சிறப்பை பெற்றது. இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.



 

 ஆடி பௌர்ணமி

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடிப் பௌர்ணமி அன்று, காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்தால் நினைத்தது ஈடேறும் என்பது ஐதீகமாக இருக்கிறது. இதனால் நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு, அரசியல் ஆளுமைகளின் குடும்பத்தினர் படையெடுத்தது பேசு பொருளாகியுள்ளது. நேற்று மாலை யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசிக்க வருகை புரிந்து இருந்தார் . சமீப காலமாக துர்கா ஸ்டாலின் அடிக்கடி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வந்து செல்வது, வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  படையெடுத்த அரசியல் குடும்பத்தினர்

 

இதனை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மனைவி சரஸ்வதி ராமதாஸ் ,  ராமதாஸின் மகள் கவிதா, அன்புமணி ராமதாஸின் மனைவி, சௌமியா அன்புமணி உள்ளிட்ட ராமதாஸின் குடும்பத்தினர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர். விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், ஆடி பவுர்ணமி அன்று அரசியல் குடும்பத்தினர், சாமி தரிசனம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண