தமிழ்நாட்டு அரசியலில் நுழைவதற்காக , எங்களை போன்ற இளைஞர்களிடம் பிரபாகரனுடன் இருந்த புகைப்படத்தை காட்டியும் , பிரபாகரன் துப்பாக்கி சொல்லிக் கொடுத்தார் என்றும்; இட்லிக்குள் ஆமைக்கரி சாப்பிட்டேன் என்றும் உண்மைக்கு புறம்பான கதைகளை கூறியது மட்டுமல்லாமல், விடுதலை போராளிகளை சிங்கள காட்டி கொடுத்தது மட்டுமன்றி, எங்களை லட்சகணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை கெடுத்துள்ளார் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், தற்போதைய திமுக மாணவர் அணி தலைவருமான ராஜீவ காந்தி கடுமையான குற்றசாட்டை வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சீமான் - பிரபாகரன் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனோடு எடுத்திருக்கும் புகைப்படம் , உண்மையில்லை; பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை  சீமான் தெரிவித்ததால், உணமையை சொல்ல வேண்டிய சூழ்நிலை என்று, அந்த புகைப்படத்தை நான் தான் எடிட்  செய்தேன் என சொன்னது, பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் சீமான்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், தற்போதைய திமுக மாணவர் அணி தலைவருமான ராஜீவ் காந்தி செய்தியாளர்களை பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் தெர்வித்ததாவது , “  சீமான், பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் உண்மையில்லை, அதை நான்தான் எடிட் செய்தேன் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தார். தற்போது, இயக்குநர் சந்தோஷ் தெரிவித்திருக்கிறார்,” சீமான், பிரபாகரனை சந்தித்தது உண்மைதான்; ஆனால் 10 நிமிடங்கள் கூட இல்லை; அந்த வீடியோ தன்னிடம் இருக்கிறது என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை என தெரிவித்திருக்கிறார்.

”தமிழீழ அரசியலை மழுங்கடித்துள்ளார்”

ஆனால், சீமான் பொய்யான புகைப்படத்தை காட்டி, எங்களை போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை கெடுத்திருக்கிறார் என தோன்றுகிறது. தமிழ் சமூகத்தில் மேலோங்கியிருந்த தமிழீழ ஆதரவையும்;  சமூக நீதி ஆதரவையும் மட்டுப்படுத்துவதற்கு, சீமான் என்ற மனிதர் வளர்த்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.  நான் சண்டை காட்சியில், இப்படி சுடு என்று பிரபாகரன் சொல்லி கொடுத்தார் என்று பொய் சொல்லி, தமிழீழ அரசியலை மழுங்கடிக்கச் செய்திருக்கிறார். 2009 போர் உச்சத்தில் இருந்த போது, சீமான் என்ன செய்து கொண்டிருந்தார். 2008 ஈழத்திற்கு சென்று வந்த பிறகு, ஈழத்தில் இதுதான் நடந்தது என்று, ஏன் எங்குமே சொல்லவில்லை.

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?

”போராட்டத்திற்கு வராமல் சூட்டிங் சென்றார்”

2008ல் போராட்டம் , தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வந்த நிலையில், கோவை சிறையில் இருந்து வெளியே வந்த சீமான் போராட்டத்திற்கு வரவில்லை; நேரடியாக சென்ற இடம், மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு. இனம்தான் பெரிது என்றால், போராட்டத்திற்கு வந்திருக்க வேண்டும்.; பணத்தை தேடி படத்திற்குச் சென்றார். நான் வலியுறுத்திய போதிலும், பொழப்ப பார்க்க வேண்டாமா என கேட்டார் சீமான். 17 பேர் தீக்குளித்த போது; ஜனவரி , பிப்ரவரி மார்ச் ஆகிய 3 மாதங்களில் சீமான் எங்கே இருந்தார். ஒருமுறை திரையுலகினர் நடத்திய மனித சங்கிலி போராட்டத்திற்கு வந்தார்.

”போராளிகளை காட்டி கொடுத்தார்”

எங்களுக்கு என்ன அச்சம் வருகிறது என்றால், தமிழீழத்தில் பார்த்த செய்த செய்தியை ,விடுதலை புலிகள் குறித்தான தகவல்களை, சிங்கள உளவுத்துறைக்கு காட்டி கொடுத்துவிட்டு , போர் முடிந்தவுடன் சூசையர் ஆடியோவை காட்டி அரசியல் செய்து வருகிறார். பிரபாகரன் மறைந்தது தெரிந்தும் , இளைஞர்களிடம் எழுச்சி வந்து விடக்கூடாது என ,மறைத்து அரசியல் செய்தவர்.இனப்படுகொலை தொடர்பாக , சட்டரீதியாக ஒன்றுகூட எடுக்காமல், ஈழப்போராளிகளை காட்டி கொடுத்திருக்கிறார். 

Also Read: Ceasefire: விடியலை பார்க்கவுள்ள மக்கள்! இஸ்ரேல் - ஹமால் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.!

”அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்”

தமிழ்நாட்டில், மத்திய அரசிடம் சுயாட்சி கேட்டு கொண்டிருப்பவர்களிடம், நீ வந்தேறி; தெலுங்கர்; திராவிடர் என பேசி ; இனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். 15 வருடங்களாக தமிழ் இனத்திற்காக என்ன செய்தார். தற்போது பார்க்கையில், ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூழி என தெரிகிறது. அவர், வாட்சப் ஸ்டேட்டஸிஸ் சமஸ்கிருத திணிப்பை விட ; இந்தி திணிப்பை விட பெரியார் திணிப்பு மோசமானது என வைத்திருக்கிறார்.

எங்களை போன்ற இளைஞர்களிடம் எத்தனை கதைகள், இட்லிக்குள் ஆமைக்கறி, மான்கறி; என மாவீரனை, போராளிகளை கொச்சைப்படுத்தியிருக்கிறார். பிரபாகரனால், அடையாளம் காணப்பட்டவன், நான்தான், என இளைஞர்களிடம் தமிழீழம் எழுச்சியுறாமல் பார்த்து கொண்டும், காட்டியும் கொடுத்தவர்; இளைஞர்களை ஏமாற்றும் சீமான், அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியவர் என முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் , தற்போதைய திமுக இளைஞர் அணி தலைவருமான ராஜீவ் காந்தி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்