முடிந்தால் தமிழிசை இதை செய்யலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழிசை முடிந்தால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி தமிழகத்திற்கு கூடுதல் மருத்துவ கல்லூரி வருவதற்கு உறுதுணையாக இருக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிமணியன்

Continues below advertisement

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

Continues below advertisement

சென்னை நந்தனம் அரசு கலை கல்லூரியில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டு வரும் அரங்கத்தின் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடப்பட்டுள்ள மரக் கன்றுகளை பார்வையிட்டு முறையாக தண்ணீர் ஊற்றுமாறு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது ; 

1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நந்தனம் கலை கல்லூரியானது 123 ஆண்டு பழமைவாய்ந்த கலை கல்லூரியாக உள்ளது. இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை அவ்வப்போது செய்து வருகிறோம். இந்த கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றால் பந்தல் அமைத்து நடத்த வேண்டிய சூழல் இருந்தது. இதனால் கல்லூரி நிர்வாகத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டு வந்தது. இதற்கு மாற்றாக ஆயிரம் நபர்கள் அமரும் வகையில் ஒரு அரங்கம் அமைத்தால் நன்றாக இருக்கும் எனவும் மற்ற நேரங்களில் அரங்கத்தில் தேர்வு அறையாக பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் கல்லூரி நிர்வாகத்தால் சொல்லப்பட்டது.

அதன் அடிப்படையில் தனது சைதாப்பேட்டை சட்டமன்ற நிதியில் இருத்து 4.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரத்து 760 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதியில் இந்த பணிகள் நிறைவு பெற உள்ளது. இன்று அதனை ஆய்வு மேற்கொண்டேன்.

2553 மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு 24 ஆயிரம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மெரிட் அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுத்தோம்.

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்கள் மதிப்பெண் வேண்டி விண்ணப்பித்தவர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றி உள்ளார்களா என்பதை உறுதி செய்த பிறகு அவர்களுக்கான போனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டு ரிசல்ட் வெளியிடப்படும். விரைவில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என தெரிவித்தார்.

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி இருக்கிறது என்ற தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் குறித்த கேள்விக்கு , 

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம். தமிழகத்துக்கு புதிதாக 6 மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து மத்திய அரசிடம் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, பெரம்பலூர், ராணிப்பேட்டை போன்ற ஆறு மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழிசை சௌந்தரராஜன் முடிந்தால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் இடம் பேசி கல்லூரி வருவதற்கு நடவடிக்கை எடுக்க உறுதுணயாக இருக்கலாம்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்களை அதிகரிப்பது குறித்தும் தமிழகத்தில் நர்சிங் கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசின் பங்கும் தேவை என்பதால் இந்த விவகாரம் குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளாம். டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு நேரில் சந்திக்க தேதி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள் என தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola