Seeman: சீமான் பாதுகாவலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.! எப்போது விசாரணை?
Seeman Security Guard Appeal: சீமான் பாதுகாவலர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Seeman Security Guard - Chennai High Court: சீமான் பாதுகாவலருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார். வீட்டில் சம்மன் கிழிக்கப்பட்டு விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது ஜாமீனை ரத்து செய்து செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீமான் மீது புகார்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, கடந்த 2011 ஆம் ஆண்டு பிரபல நடிகை பாலியல் புகார் அளித்தார். சீமான், தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்தார்.ஆனால் சில நாட்களுக்கு பிறகு வழக்கை வாபஸ் பெறுவதாக வீடியோ வெளியிட்டிருந்தார், நடிகை. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு, சீமானுக்கு எதிராக பாலியல் புகாரையும், பணம் பறித்தாதாகவும் புகார் கொடுத்தார், அதே நடிகை.
கடந்த 2011 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரை, ரத்து செய்யவேண்டும் என்று சீமான் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். ஆனால், அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் , இந்த புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சீமான் பாதுகாவலர் :
இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியது வளசரவாக்கம் காவல்துறை. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி , சென்னை நீளாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் , விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டபட்டது. ஆனால், அப்போது சீமான் வீட்டில் இருந்தவர் , நோட்டீசை கிழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது, நோட்டீசை கிழித்தவரையும், சீமானின் பாதுகாவலரையும் காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பாதுகாவலரிடம் துப்பாக்கி இருந்ததை பார்த்த காவல்துறையினர் , அதை பிடுங்க முயன்றபோது பெரும் தள்ளு முள்ள ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர் காவல்துறையினர்.
இந்நிலையில், துப்பாக்கி வைத்திருந்த சீமானின் பாதுகாவலர் அமல்ராஜ் என தெரிய வந்துள்ளது . இவர் 18 வருடங்களாக, காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. இவரை கைது செய்யும் போது, தனது பாதுகாப்பாக துப்பாக்கி வைத்திருக்கிறேன் என காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
அப்போது, நோட்டீஸ் கிழிப்பு விவகாரம் தொடர்பாக பாதுகாவலராக இருந்த முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ( BSF ) அம்லராஜ் மற்றும் நோட்டீசை கிழித்த சுபாஷ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படட்து.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமானின் பாதுகாவலர் அம்லராஜ் மற்றும் சுபாஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கானது வரும் மார்ச் 10 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.