டாஸ்மாக் நிறுவன அலுவலகங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை முதல் தமிழகத்தில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை, திமுக எம்.பி. ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான நிறுவனங்கள், இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி நிர்வாகிக்கும் துறையிலேயே நேரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த நிலையில், ஜாமீனில் அவர் வெளியே வந்ததும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு மீண்டும் தரப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அவரை குறி வைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது