எம்ஜிஆர் ஆட்சிக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக என ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைந்துள்ளது, புதியதாக வருபவர்கள் (விஜய்) முயற்சி செய்கிறார்கள் அவர்கள் முயற்சியை தடுக்க முடியாது, அவர்களது முயற்சி கொச்சைப்படுத்த முடியாது என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமுறை சங்கமம் நிகழ்ச்சிக்கு பிறகு புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி அளித்தார்.
காஞ்சிபுரம் திருமுறை திருவிழா
காஞ்சிபுரத்தில் தனியார் அமைப்பு சார்பில் திருமுறை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ ஏலவார் குழலி, சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தனியார் திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் திருவிழாவில், மேடையில் திருமண கோலத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஏலவார்க் குழலி சமேத ஏகாம்பரநாதருக்கு திருமண சடங்குகள் நடைபெற்று மாலை மாற்றி மாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
விழாவில் புதிய நீதிக் கட்சியின் தலைவரும், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஏசி சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என ஏராளமானார் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டு வருகிறார்கள்.
6 தொகுதிகள் கேட்டு வெற்றி பெறுவோம்
பின் செய்தியாளரை சந்தித்த புதிய நீதி கட்சி தலைவர் சண்முகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி அங்கம் வகிக்கிறது, 2026 சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதி பெற்று வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
எம்ஜிஆர் ஆட்சிக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக என ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைந்துள்ளது, புதியதாக வருபவர்கள் (விஜய்) முயற்சி செய்கிறார்கள் அவர்கள் முயற்சியை தடுக்க முடியாது, அவர்களது முயற்சி கொச்சைப்படுத்த முடியாது.
இளைஞர்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்டவை நடப்பதற்கு காரணம் மது மற்றும் போதை பொருட்கள், இதற்கு ஆளும் அரசாங்கம் காவல்துறை வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமுறை சங்கமம் திருவிழாவுக்கு பின் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டியளித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போது, அதிகபட்சமாக பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. பிற கட்சிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதுல அதிமுக பெரும்பாலான இடங்களில் போட்டியிட முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலான தொகுதிகளை எதிர்பார்க்கிறது.
பாஜக 50 தொகுதிகள் வரை எதிர்ப்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். புதிய நீதி கட்சி போன்ற கட்சிகளும் தற்போது 6 தொகுதிகள் வரை கேட்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்த அதிமுக தரப்பில் பேசுகையில், கூட்டணிக்கு தொகுதிகளை கேட்பவர்கள் அதிகபட்ச தொகுதிகள் எதாவது கேட்பார்கள். பேச்சுவார்த்தையின் போது எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆளும் கட்சியை வீழ்த்த வேண்டும் என்று எடுத்துக் கூறி அவர்களின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிவித்தனர்.