சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லை சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற குழு பாஜக தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் 3 டாக்டர் பட்டம் பெற்று பல்வேறு உலக சாதனைகள் படைத்த இளம் வயது யோகா ஆசிரியரான பிரிஷா என்ற மாணவி பல்வேறு யோகா சாகசங்களை செய்து காட்டினார்.



“அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் சரி..! இப்படிபட்டவர்தான் வரணும்”  -  பரபரப்பை கிளப்பிய பாஜகவின் நயினார்!


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டமன்ற குழு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, “63 கலைகளும், உருவான நாடு பாரத நாடு. சுவாமி விவேகானந்தர் வாக்கு இப்போது நடந்து வருகிறது. உலக நாட்டின் எங்கும் இல்லாத பெருமை இந்திய நாட்டுக்கு இருக்கிறது. கலாச்சாரம் பண்பாடு உள்ளிட்டவைகளின் காரணமாக இந்தியாவை  உலக நாடுகள் திரும்பி பார்க்கிறது. உலகத்தின் அனைத்து பிரதமர்களின் யோகா குருவாக மோடி திகழ்ந்துவருகிறார் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சி கழுதை தேர்ந்து கட்டெரும்பாகி காங்கிரஸ் இல்லாமல் போய்விட்டது. திமுகவுடன் காங்கிரஸ் இல்லை என்றால் தமிழகத்திலும் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும். பிரதமரின் அற்புதமான திட்டம் அக்னிபாத்.10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்தவர்கள் 30 ஆயிரம் மாதம் சம்பளம் என்ற அற்புதமான திட்டம் உலகில் எங்கும் இல்லை. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் காங்கிரஸ் கம்யூ இயக்கங்கள் மக்களை தூண்டி விடுகிறது. தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக மக்களை மறைவில் இருந்து திமுக தூண்டுகிறது” எனவும் தெரிவித்தார்.


 “அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆர் ஜெயலலிதாவால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கட்சி. கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தொண்டர்களின் மனநிலைக்கேற்ப நல்ல தலைவராக இரண்டில் ஒருவர் யார் நல்லவரோ அவர் வரவேண்டும் தகுதியானவர் வரவேண்டும். அதிமுக கட்சியின் விதி 20 பி படி அனைத்து சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும். நகர பஞ்சாயத்து செயலாளர் தொடங்கி பல உறுப்பினர்கள் எம்ஜிஆர் காலம் முதல் பொதுக் குழுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு திறமை மிக்க ஒரு தலைமை வேண்டும். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை சரிதான்” என தெரிவித்தார்.