அதிமுக தலைமைக் கழக அறிவிப்புபடி கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிமுகவின் கோட்பாட்டிற்கு எதிராக செயல்பட்ட புகழேந்தி என்பவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனிடையில் கழகத் தொண்டர்கள் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை வழங்கிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக கையெழுத்திட்ட அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்திற்கு வரவழைத்து ஒரு மணிநேரம் பேசியுள்ளார். எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் மணிகண்டன் என்பவர் புகார் மனு அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார். 



இதுதொடர்பாக புகார் மனு அனுப்பிய முன்னாள் கவுன்சிலரும், அதிமுக உறுப்பினருமான வழக்கறிஞர் மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை ஒரு மணி நேரத்துக்கு மேலாக சந்தித்து பேசியுள்ளார். பின்னர் வெளியே வந்த பெங்களூர் புகழேந்தி பன்னீர்செல்வத்தின் வீட்டின் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியின் பற்றிய அநாகரிக மாக விமர்சித்துப் பேசியுள்ளார். இது கட்சித் தொண்டர்களிடையே இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் உருவெடுப்பார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நான் அளித்த புகார் மனுவிற்கு பொதுக்குழு கூட்டத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த பிறகு அடுத்தகட்ட கூட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கை என்றார்.



திமுகவில் இருந்து வஞ்சிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட எம்ஜிஆரால் அதிமுக எதிராக உருவாக்கப்பட்டதுதான் அதிமுக. ஆனால் இந்த அதிமுக கோட்பாடுகளை உடைத்தெறிந்து திமுகவை பாராட்டுவதும், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை சந்தித்தார். இதனிடையே பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக தினகரன் பேட்டி வாயிலாக தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு கட்சிக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி கண்ணியம் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் நீடித்துக் கொண்டு கொண்டிருக்கிறார். அவர் மீது எடுக்கும் நடவடிக்கையை தள்ளி வைத்துள்ளார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தீர்மானமாக நிறைவேற்றி பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தக் கட்சியிலும் இரட்டை தலைமை என்பது இல்லை, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும்,திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அப்பொழுது இரட்டை தலைமை கொண்டு வரப்பட்டது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.


இவர் கடந்த 16 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சேலம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.