அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் நவநீதகிருஷ்ணன் பங்கேற்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீத கிருஷ்ணன் எம்.பி. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Navaneethakrishnan Speech : பெயரே கொடுக்கல!எப்படி பேச முடியும்?சபாநாயகரை கடுப்பாக்கிய நவநீதகிருஷ்ணன்


முன்னதாக நேற்று, திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் நவநீதிகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியபோது, தான் மாநிலங்களவைக்குப் புதிதாக சென்றபோது பல விஷயங்களை  டி.கே.ரங்கராஜன், கனிமொழி ஆகியோா் கற்றுக் கொடுத்தனா் என்று கூறினார். 


 






மேலும், ஒருமுறை மத்திய அமைச்சருடன் எனது அனுபவமின்மை காரணமாக சண்டை போட வேண்டியிருந்தபோது, கனிமொழி தன்னை சமாதானப்படுத்தி அவரே மத்திய அமைச்சருடன் பேசியதாகவும், தாங்கள் எடுத்துக் கூறிய விஷயம் தமிழ்நாட்டை பொருத்தவரை பாதிக்கக் கூடிய விஷயம் எனவும் அமைச்சருக்கு கூறியதாகவும் தெரிவித்தார்.


Vijayakanth | ‛விஜயகாந்த் பற்றி மோடி காதில் போட்ட சோ... விஜயகாந்தும்-ஜெயலலிதாவும் பிரியவில்லை’ - மனம் திறந்த தேமுதிக து.செயலாளர் பார்த்தசாரதி!


கனிமொழியை பாராட்டி பேசிய நிலையில், நவநீதிகிருஷ்ணனை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண