கரும்பு-விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்காததையடுத்து, நீதிமன்றத்துக்கு சீமான் சென்றார். இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவித்ததாவது,
நாம் தமிழர் கட்சி:
”கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்குமாறு தெரிவித்தேன், பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சியை அடுத்து, அதிக வாக்குகள் உள்ள கட்சி நாம் தமிழர் கட்சிதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 8 விழுக்காடு வாக்குகள் தொட வேண்டும்னு சொல்றீங்க,7 விழுக்காடு வந்தவனுக்கு 8 தொட முன் எடுத்துட்டிங்க”.
”முதலில் மனு கொடுத்தால், கரும்பு விவசாயி சின்னம் கொடுத்ததாக சொல்கிறார்கள், அதை ஏற்கிறேன் , அந்த நேரத்தில் பின்னாடிதான் மனு கொடுத்தேன், வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றேன். ஆனால், அவர்கள் கொடுத்த கால அளவுக்குள்தான் கொடுத்தேன்; கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்திருக்க வேண்டாமா”.
”புலி கேட்டேன் ; மயில் கேட்டேன்; கொடுக்கவில்லை. ஆனால், பாஜகவுக்கு தாமரை மலரை ஏன் கொடுத்தீங்க, அப்போ புலியை கொடுங்க; தேர்தல் நடக்கும்போது கை அசைத்தால் கையை வெட்டிருவிங்களா; சூரியனை மறைச்சிருவீங்களா என கேட்டார். ஸ்டேப்ளர்-பின், குண்டூசி உள்ளைட்டவைகளையெல்லாம் சின்னங்களாக வைத்துள்ளார்கள்”.
சின்னம் இருக்க வேண்டும்:
”எனக்கு செருப்பு கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன், எந்த சின்னம் கொடுத்தாலும் போட்டியிடுவேன்; ஆனால் நோக்கம், லட்சியம் உள்ளது; அதற்கு ஏற்ப சின்னம் இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்சி சின்னதை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இப்படியிருக்க, கட்சி சின்னத்தை பறிகொடுக்கும் சூழல் நாம் தமிழர் கட்சிக்கு உருவாகியிருப்பது, அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பொதுவாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சின்னம், கர்நாடக கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்துக்கும் செல்வேன் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
Also Read: விவசாய சின்னத்தை இழக்கிறதா நாம் தமிழர்? கர்நாடக கட்சியால் வந்த சிக்கல்.. அடுத்த பிளான் என்ன?