இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், ( மார்ச் 1) தேதி பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது.
இதையடுத்து கட்சி பணிக்காக நிதி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். மேலும், பாஜகவின் கட்சி பணிக்கு பிரதமர் மோடி ரூ. 2000 நிதியாக அளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஆயிரம் ரூபாயை கட்சி நிதியாக அளித்துள்ளனர்.
முதற்கட்ட பட்டியலான 195 தொகுதியில், உத்தரப் பிரதேசத்தில் 51 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 20, இடங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 24 இடங்களுக்கும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15 இடங்களுக்கும், கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அசாமில் 11, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 இடங்களுக்கும், டெல்லியில் இருந்து 5 இடங்களுக்கும், ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களுக்கும், உத்தரகாண்டில் 3 இடங்களுக்கும், அருணாச்சல பிரதேசத்தில் 2 இடங்களுக்கும் மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான் & நிக்கோபார் மற்றும் டையூ & டாமனில் இருந்து தலா ஒரு இடங்களுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 47 இளைஞர் வேட்பாளர்கள், 28 பெண்கள், 27 எஸ்.சி வேட்பாளர்கள், 18 எஸ்.டி வேட்பாளர்கள் மற்றும் 57 ஓபிசி வேட்பாளர்கள் உள்ளனர் என பாஜக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கட்சி பணிக்காக, நிதி அளிக்குமாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.