தமிழகத்தின் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர்  மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் நல்லம நாயுடு. தனது தனித்துவமான விசாரணையால் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவர் நல்லம நாயுடு. நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றியதால்  பல பிரச்சினைகளை அனுபவித்தார். 


1961ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் இணைந்த நல்லம்ம நாயுடு படிப்படியாக பதவி உயர்வுப்பெற்று  லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்.பியாக ஓய்வுப்பெற்றார்.


1996-ஆம் ஆண்டில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமிக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதா வீட்டை சோதனையிட நல்லம்ம நாயுடு தலைமையிலான  படை அவரது போயஸ் கார்டனுக்கு விரைந்தது. குவிந்திருந்த தொண்டர்களுக்கு மத்தியில் மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நல்லம்ம நாயுடு தலைமையிலான படையினர் உள்ளே சென்றனர். சுமார் 4 நாட்களுக்கு மேல் ரெய்டு தொடர்ந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலகையே அதிர வைத்தன.  அப்போது 28 கிலோ தங்கம், 389 ஜோடி செருப்புகள் 914 பட்டுப்புடவைகள் என வைரம் முதல் செருப்பு வரையிலான பொருட்கள் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. அப்போதுதான் அந்த சர்ர்ச்சை வெளிச்சத்துக்கு வந்து  மிகுந்த பேசு பொருளாக மாறியது. அந்த வழக்கில் ஆறே மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தார். இது ஜெயலலிதா தனது பதவியை இழக்கவும் சிறை செல்லவும் முக்கிய காரணமாக அமைந்தது.


மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்   2015-ஆம் ஆண்டு வரை, முதன்மை விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். 1996ல் குழு திரட்டிய ஆதாரங்கள்தான்  பெங்களூர் நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா எழுதிய அதிரடியான தீர்ப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.  ஜெயலலிதா போன்றவர்கள் உச்ச அதிகாரத்தி இருந்தபோதும் நல்லம நாயுடு வழக்கை திறம்பட கையாண்டதுதான் ஜெயலலிதா உள்ளிட்டோருக்குத் தண்டனை கிடைக்கவும் வழிவகை செய்தது   அப்போது ஜெயலலிதா சென்னை மத்திய சிறையில் இருந்தபோது, அவரை விசாரிக்க நேரடியாக சிறைக்கே சென்றவர் நல்லம நாயுடு. வேறு தலைவர்களை இப்படி சிறைக்கு வந்து விசாரிப்பீர்களா என்று  நல்லம நாயுடுவிடம் ஜெயலலிதா சீறியதாகவும் பின்னர் ஒத்துழைப்புக் கொடுத்ததாகவும் தகவல்கள் கசிந்தன. 


1992-ல் அ.தி.மு.க ஆட்சியின்போது ‘லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறந்த அதிகாரி என நல்லம நாயுடு அறிவிக்கப்பட்டார். . நிர்வாகக் காரணங்களால் பதக்கம் அளிக்கும் விழா தள்ளிப்போனது. இந்நிலையில் 2001-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஜெயலலிதாவின் கையால், விருது வாங்க சூழல் நல்லம நாயுடுவுக்கு ஏற்பட்டது. அதற்கான ரிஹர்சல் விழாவில், ஜெயலலிதா கோபமுறக்கூடும் என்பதால் அதிகாரிகள் தடுத்துபோதும் அந்த விழாவுக்கு வருவதில் உறுதியாக இருந்துள்ளார் நல்லம நாயுடு.  ஆனால், மேலிட அதிகாரிகள் அவரை தடுத்து, விருதை வீட்டுக்கே அனுப்பி வைத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. ஆனால் தனது மரணம் வரை அதை அவர் அணியவே இல்லை


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.


சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது, 2 முறை குடியரசுத் தலைவர் விருது, ஆளுநரின் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2001-ஆம் ஆண்டுக்குப்பின் ஓய்வுப்பெற்ற நல்லம்ம நாயுடு சென்னை பெரவள்ளூரில் தனது மகனுடன் வசித்து வந்தார். நேர்மையான அதிகாரிக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.