TN BJP Leader: பாஜக மாநிலத் தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

Nainar Nagendran: பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

போட்டியின்றி தேர்வானார் நயினார் நாகேந்திரன்

மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட நயிநாருக்கு மட்டுமே கட்சித் தலைமை அனுமதி வழங்கியதையடுத்து, நயினார் நாகேந்திரன் இன்று, அண்ணாமலை, எல். முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில், தனது விருப்ப மனுவை, பாஜக மாநில தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தியிடம் வழங்கினார். நயினார் நாகேந்திரன் தலைவராவதற்கு, அண்ணாமலை, எல். முருகன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் பரிந்துரை செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தன்னை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற விதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தேர்தல் அதிகாரியிடம் தான் கேட்ட வேண்டும் என்று கூறினார்.

இதனிடையே, மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு வழங்கிய நிலையில், அவர் பாஜக மாநிலத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

மாநிலத் தலைவர் பதவிக்கான விதிகளை தளர்த்திய பாஜக தலைமை

மேலும், மாநிலத் தலைவர் பதவிக்கு குறைந்தது 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி கூறியுள்ளார். ஏற்கனவே, பீகார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையால் இதுபோன்று விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், அதனால், நயினார் நாகேந்திரன் தலைவராவதில் சிக்கல் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola