முதலமைச்சரே அஜித் குமாரின் தாயரிடம் மன்னிப்பு கேட்கும் போது நான் பல முறை மன்னிப்பு கேட்க வேண்டுமே அஜித் குமார் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நிகிதா உருக்காமாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார். 

லாக் அப் மரணம்: 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த என்பவர் மீது மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்பவர் தனது நகையை காணாவில்லை என்று புகாரளிக்க போலீசார் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று அவரை கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த லாக் அப் மரணம் தமிழகம்  முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருந்தது. 

இந்த சம்பவத்தில் தொடர்புடையை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு விசாரணையானது நடைப்பெற்று வருகிறது. ‘

நிகிதா தலைமறைவு:

இந்த வழக்கின் ஆரம்ப புள்ளியாக இருந்த நிகிதாவின் மீது கடந்த 2010 ஆண்டு பணமோசடி வழக்கு ஒன்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் திண்டுக்கல்லில் பேராசிரியராக நிகிதா இருந்த போது மாணவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக கல்லூரி மாணவர்கள் கடந்த ஆண்டு புகாரளித்தனர். இப்படி அடுத்தடுத்து புகார் நிகிதா மீது எழுந்த நிலையில் அவர் தனது தாயாருடன் தலைமறைவானதாக தகவல்  வெளியானது. 

புதிய ஆடியோ: 

இந்நிலையில் நிகிதா பேசிய புதிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அவர் பேசியுள்ள ஆடியோவில் “நான் மிகுந்த வேதனையுடனும், துயரத்துடனும் இந்த ஆடியோ பேசி அனுப்புகிறேன். ஒரு பெண் இந்த சமுதாயத்தில் படித்து, வளர்ந்து, உயர் கல்வியை முடித்து ஒரு வேலையை வாங்கி குடும்பத்தை காப்பாற்றுவது எவ்வளவு சவால் நிறைந்த விஷயம்.

ஒரு பெண் சிறிய தவறு செய்தால் அதை குறையாக சொல்ல ஆயிரம் பேர் வந்து அவளை இந்த பூமியில் குழித்தொண்டி புதைக்கும் வரை விட மாட்டார்கள். பெண்களுக்கு இந்த சமுதாயம் அவ்வளவு தான் நீதி தான் கொடுக்கிறது. 

பல முறை மன்னிப்பு கேட்க வேண்டும்:

நான் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தம்பி அஜித்குமாரின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பாகும். அவங்க அம்மா அழுதாங்களோ இல்லையோ, நானும் எனது அம்மாவும் அஜித்தின் இறப்புக்கு தினமும் அழுதுக்கொண்டு இருக்கிறோம்.

மேலும் எனக்கு எந்த ஒரு உயர் அதிகாரியையும் தெரியாது, எந்த ஐஏஎஸ் அதிகாரியையும் தெரியாது முதல்வர் ஸ்டாலினுடன் என்னை சேர்த்து வைத்து பேசுகிறார்கள், முதல்வர் மீது எனக்கு மரியாதை உள்ளது, மற்றப்படி தனிப்பட்டப் முறையில் அவரை எனக்கு தெரியாது. முதல்வர் ஸ்டாலினே அஜித் குமாரி தாயாரிடம் மன்னிப்பு கேட்கிறார்  என்றால் நான் அஜித் அம்மாவிடம் பல முறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். 

எறும்பைக் கூட கொல்ல மாட்டேன்:

என்னை கேமராக்கள் தொடர்ந்து பின் தொடர்வதால் என்னால் வெளியே வர முடியவில்லை. நான் உயிர்களை மிகவும் நேசிக்கிற ஆள், எந்த உயிருக்கும் பாதிப்பு வரக்கூடாது என நினைப்பேன், குக்கர் முடியில் எறும்பு இருந்தால் கூட அதை மெதுவாக தள்ளிவைத்து நான் சாதம் வைப்பேன், அழிப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது என்றார். 

யாரையும் தெரியாது:

எனக்கு ஐஏஎஸ் அதிகாரியை தெரியும், அவருக்கு போன் செய்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அஜித் குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என உண்மையாகவே அக்கறை இருந்தால் இப்படி திசை திருப்பும் வகையில் செய்தி ஊடகங்கள் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை மீது சேற்றை வாரியிறைப்பது இந்த சமூகத்துக்கு தேவை இல்லாத விஷயம்.

நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது அப்பா ஒரு நேர்மையான அரசு அதிகாரி. ஒவ்வொரு ஆண்டும் கலெக்டரிடம் பாராட்டு பெற்றவர். இதை உலகமே எதிர்த்தாலும் நான் தெரிவிப்பேன். என் அப்பா உயர் பதவியில் இருந்தாலும், லோன் வாங்கி நாங்கள் வீடு கட்டினோம். நாங்கள் எந்த சூழ்நிலையிலும் சட்டத்தின் வழியே நடக்கிறோம்." என்று ஆடியோவில் நிகிதா பேசியுள்ளார்