ஒரு கவுன்சிலர் கூட இல்லை அதற்குள் பணத்தை வைத்து விஜய் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைக்கிறாரா என்று பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

நயினார் சுற்றுப்பயணம்: 

பாஜக மாநில தலைவர் நயினார் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்கிற பயணத்தை மேற்க்கொண்டு வருகிறார். இந்ந நிலையில் இன்று பட்டுக்கோட்டைக்கு வந்த  நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார், 

ஒரு கவுன்சிலர் கூட இல்லை: 

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் 2026 தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டியே என்று ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார் என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர் இப்படி பேசியிருப்பது விந்தையிலும் விந்தை, ஆதவ் அர்ஜுனாவின் பணத்தை வைத்து விஜய் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறாரோ என்பது தெரியவில்லை. தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை. தேர்தல் வருவதால் கூட்டத்தை கூட்டி விடலாம். ஆனால் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். எம்.எல்.ஏக்கள் வர வேண்டும், 

Continues below advertisement

பாஜகவில் தற்போது 300 எம்.பிக்கள், 1200 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், உலகில் மிகப்பெரிய கட்சிக்களுக்குள் ஒன்று பாஜக, ஆனால் தவெகவுக்கு என்று கேட்டு தனது இரு கையையும் நயினார் நகேந்திரன் விரித்தார். 

தீவிரமாக பாஜக எதிர்க்காது: 

தொடர்ந்து பேசிய அவர், பாஜக தீவிரமாக யாரையும் எதிர்க்காது, நாங்கள்  கொள்கை ரீதியாகவே எதிர்கப்போம். எங்களை பொறுத்தவரை யாரையும், எப்போதும் தீவிரமாக எதிர்ப்பு கிடையாது. கொள்கை அளவில் எதிர்க்கிறோமே தவிர, தனிப்பட்ட முறையில் எந்த தாக்குதலும், எந்த எதிர்ப்பும் யார் மீதும் இதுவரை கிடையாது. இனிமேலும் இருக்காது. தவெகவுக்கு பாஜக ஆதரவு தருகிறது என கூற முடியாது. கரூரில் நடந்த சம்பவம் குறித்து நான் பேசினேன். அதிமுக, பாஜக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். என்னுடைய பதவி எண்ணப்படுவதாக சேகர்பாபு கூறுகிறார்.

பாஜகவை பொறுத்தவரை ஒருவர் பதவிக்கு வந்தால் 3 ஆண்டுகள்தான் பதவி. அந்த பதவியை நீடிப்பு செய்தும் கொடுக்கலாம். கடந்த ஏப்.11-ம் தேதியில் இருந்து தற்போது 6 மாதம் எனது பதவி காலம் முடிந்துள்ளது.என்னுடைய பதவிக் காலம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளது. ஆனால், அமைச்சர் சேகர் பாபுக்கு பதவிக்கும் திமுக ஆட்சிக்கும் இன்னும் இரண்டரை மாதம் தான் இருக்கிறது என்றார்.