தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேரவை விதி 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வன்னிய இட ஒதுக்கீட்டுக்காக உயிர்நீத்த 21 பேருக்கு போராளிகள் 21 பேருக்கு ரூபாய் 4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பல்வேறு கட்சியினரும் நன்றி தெரிவித்துள்ளனர். சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் நிருபர்களைச் சந்தித்தார்.




அப்போது, அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையாகவும், போராட்டமாகவும் இரண்டு விஷயங்கள் இருந்தது. இந்த இரண்டிலும் தமிழக அரசு இன்று வெற்றியைத் தந்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்கள் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


அதேபோன்று, சுங்கச்சாவடிகள் அமைப்பதை தொடர்ந்து எதிர்த்து போராடி வருகிறோம். இதுதொடர்பாக, இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதனடிப்படையில் மாநகர எல்லைக்குள் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளதோடு, விரைவில் அந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைப்பு மற்றும் அகற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக முதல்வர் தெரிவித்துள்ளதற்கு நன்றி"  இவ்வாறு அவர் கூறினார்.




முன்னதாக, சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகளே இருக்க வேண்டிய நிலையில் 48 சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளினால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நெடுஞ்சாலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், சில சுங்கச்சாவடிகளில் அதிகளவில் கட்டணங்கள் வசூலிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.


மேலும் படிக்க : Kodanad Case | கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : பரபரப்பான நிலையில் இன்று மீண்டும் விசாரணை..!