சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தினருடன் இணைந்து ஐ.ஜே.கே. கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஐ.ஜே.கே. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் குறித்த விவரங்களுடன் வேட்புமனுத் தாக்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே, உரிய விண்ணப்பம் அளித்தும் மார்ச் 11-ம் தேதி மனு நிராகரிக்கப்பட்டது. எங்கள் மனுவை முறையாகப் பரிசீலித்து மார்ச் 19-ம் தேதிக்குள் பொதுச் சின்னம் ஒதுக்கச் சட்டத்தில் இடமுள்ளது.வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னம் தேர்தல் ஆணையத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதால், ஆட்டோ ரிக்ஷாவை ஐஜேகேவின் பொதுச் சின்னமாக ஒதுக்க வேண்டும் என்றும், அல்லது வேறொரு பொதுச் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.
நாளை மாலைக்குள் பொதுச்சின்னம் குறித்து உத்தரவிட வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு
ABP Tamil | 16 Mar 2021 03:19 PM (IST)
சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு நாளை மாலைக்குள் பொதுச்சின்னம் ஒதுக்குவது குறித்து உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
madras_High_Court
Published at: 16 Mar 2021 03:19 PM (IST)