இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி முதற்கட்டமாக 50ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி இன்று முதல் துவக்கப்படுகிறது.
கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணியை துவக்கி வைக்க ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர் 50,001 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணியை ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு,
திருக்கோவில்களின் சொத்துக்களை இணையதளத்தில் வெளியிடுகின்ற பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வகையில் திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்களை DGPS ரோவர் கருவிகள் மூலம் நில அளவை செய்து அந்த திருக்கோவிலுக்குண்டான நிலங்களை முழுமையாக பாதுகாத்திட வேண்டி தற்போது திருப்புலிவனம் பகுதியிலுள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான 9.72 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் இன்று துவக்கப்பட்டுள்ளது. இன்று அளவீடு செய்யப்படும் இந்த 9.72 ஏக்கர் நிலங்களையும் சேர்த்து 50 ஆயிரத்து 1 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி இன்றைக்கு நிறைவுற்று இருக்கிறது.
இதுவும் தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் இதுவும் ஆன்மிகத்தில் ஒரு புரட்சி என்று எடுத்துக்கொள்ளலாம் என்றும், இந்த பணி மேலும் தொடர இருக்கிறது என்றும், இந்த நில அளவீடு பணியில் ஏற்கனவே 150 நில அளவர்கள் நியமனம் செய்து 20மண்டலத்தில் 50குழுக்களாக பிரித்து நில அளவீடு பணி நடந்துக்கொண்டிருக்கிறது என்றும். மேலும் விரிவுபடுத்துக்கின்ற வகையில் மேலும் 66 நில அளவர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை 100 குழுக்களாக விரிவுப்படுத்தி மூன்று மாதங்களுக்குள் ஒரு லட்சம் அளவிற்கு திருக்கோலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை நிறைவு செய்ய இருக்கின்றோம் என்றும்,இப்பணிகளால் கோவில் நிலங்கள் பாதுக்காக்கப்படும் என்பது மட்டுமல்லாமல் கோவில் நிலங்களுக்குரிய வரைப்படத்தையும் ரோவர் கருவியின் மூலம் தயாரிக்கப்டும் என தெரிவித்தார்.
மேலும் கச்சத்தீவு மீட்பு குறித்து அவரவர் உரிமையை கூறுவதில் கருத்து கூற விரும்பவில்லை. முதலமைச்சர் நிலைப்பாடு கச்சத்தீவை மீட்பது மீனவர்களுக்கு உண்டான போதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவது, மீனவர்களின் ஜீவாதார உரிமை என கூறியிருக்கிறார். ஆகையால் மற்ற மாநிலத் தாளர்கள் அவர்கள் கூறியிருக்கிறார் என்றும், கோவில் சொத்து வாடகை 2012 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீத வாடகை உயர்வு தொடர்ந்து, இதனை குழு அமைத்து ஆய்வு செய்து முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஓரிரு மாதங்களில் சரிசெய்யபடும், என்றும் வாடகை குடியிருப்புகளில் இருப்பவர்கள் அதிக வாடிகை என்று வருத்தப்படுவர்கள் மகிழ்ச்சி அடைகின்றப்படி அமையும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம்,எம்.எல்.ஏக்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி.எழி லரசன்,உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.