கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் நடைபெற்ற கபிலர் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, பட்டிமன்ற தலைப்பு பாரதநாட்டின் பண்பாடு என இருந்ததால் ஆதங்கமாக பேசினார். பெயருக்கு பண்பாட்டுக் கழகம் வைத்து நடத்தாமல் மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என ஆவேசமடைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கபிலர் பண்பாட்டு கழகத்தின் சார்பில் 46 ஆவது ஆண்டு கபிலர் பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த விழாவின் நிறைவு நாளான இன்று திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, பாரத நாட்டின் பண்பாடு என தலைப்பு இருந்ததால் ஆதங்காமடைந்த அமைச்சர், இந்திய நாடு என வைக்க வேண்டியதுதானே என்று பேசினார். மேலும், பெயரளவிற்கு பண்பாட்டுக் கழகம் வைத்து நடத்தாமல் திருக்கோவிலூரில் உள்ள பலருக்கு திருக்கோவிலூரின் வரலாறு தெரியவில்லை எனவும், அதனை தெரியப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் இது போன்ற பட்டிமன்றங்களை நடத்துங்கள் என ஆதங்கமாக பேசினார். இந்த நிகழ்வின்போது, அவருடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பட்டிமன்ற பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலர் இருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்