மயிலாடுதுறை மாவட்டம்  மணல்மேடு பேரூராட்சி மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று அமைச்சர் மெய்ய நாதன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு தெரியாமல் விழா அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு திறப்பு விழா செய்ததாக விழா மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேரடியாக அமைச்சர் முன் குற்றம் சாட்டினார். தொடர்ந்து யாரிடம் சொல்லிவிட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தீர்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது  எல்லோரிடம் சொல்லி ஆகிவிட்டது என்று மாவட்ட ஆட்சியர் பதிலுக்கு வாக்குவாதம் செய்தார்.


IND vs WI 100th Test: சபாஷ்.. வெ. இண்டீசுக்கு எதிராக 100வது டெஸ்ட்..! புதிய வரலாறை எழுதும் இந்தியா..!




ஒரு கட்டத்தில் கடுப்பான அமைச்சர் மெய்யநாதன், எல்லோரும் அமைதியாக இருங்கள் இல்லையென்றால் அனைத்து நிகழ்ச்சியும் கேன்சல் செய்து விடுங்கள் என்று கூறியதுடன் பத்திரிகையாளர்கள் பார்க்கிறார்கள் மூன்றாவது கண்ணாக அவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரை சமாதானம் செய்யும் விதமாக மரக்கன்று நட்டு வைக்க சொல்லி சட்டமன்ற உறுப்பினர் கையை பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். 


CM MK Stalin Letter: ”20 நாட்கள்தான் தாங்கும்.. குறுவையை காப்பாற்ற இதுதான் வழி” - ஜல்சக்தி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்


முதல் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உடன் தகராறு என்றால், அடுத்த நிகழ்ச்சி ஆன திருமங்கலத்தில் நடைபெற்ற கட்டிட திறப்பு விழாவில் சொந்த கட்சிக்காரரான திமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரான சுரேஷ் என்பவர் யாருக்கும் தகவல் சொல்வதில்லை அழைப்பிதழில் எங்கள் பெயர் கூட போடுவதில்லை உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் அவ்வளவு கேவலமா? என்று அமைச்சர் முன்னிலையில் சவுண்ட் விட்டார். இதனை அடுத்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் பொதுவெளி இதையெல்லாம் பேசாதீர்கள் என்று அவரிடம் மீண்டும் மல்லுக்கு நின்றார். அங்கேயும் சமாதானம் செய்த அமைச்சரிடம் செய்தியாளர்கள் ஏதாவது பேட்டி உள்ளதா என்று கேட்டதற்கு கையை எடுத்து கும்பிட்டு ஆளை விடுங்கள் என்று கூறிவிட்டு நடையை கட்டினார்.


Manipur Violence: மணிப்பூரில் இளம்பெண்களை நிர்வாணமாக்கி கொடூரம்; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை; பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் சிகிச்சை- அன்புமணி




இதுகுறித்து விசாரித்த போது அமைச்சர் திறப்பு விழாவிற்கு முன்பாக,  சட்டமன்ற உறுப்பினரின் இந்த வார சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலில் 21 -ஆம் தேதி மணல்மேடு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் திறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சட்டமன்ற உறுப்பினரிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை திமுகவினர் புறக்கணித்து வருவதாக செய்திகள் வந்த நிலையில், அமைச்சர் முன்னிலையில் ஏற்பட்ட மோதல் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.