மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7 -ம் தேதி கோயம்புத்தூரில் துவங்கிய சுற்றுப்பயணம் நேற்று மாலை மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்தார்.
உற்சாக வரவேற்பு
முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் அவருங்கு அதிமுக, பாஜக, தமாக மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கொள்ளிடம் கடைவீதி, சீர்காழி புதிய பேருந்து நிலையம், ஆக்கூர் முக்கூட்டு, செம்பனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் உரையாற்றினார்.
ஸ்டாலின் பொய் பரப்புரை
அதனைத் தொடர்ந்து இரவு மயிலாடுதுறை சின்னகடைவீதியில் மூலம் வாகனத்தில் நின்றவாறே மக்களை சந்தித்து பரப்புரை செய்து பேசுகையில், 50 மாத திமுக ஆட்சியில் எந்த ஒரு பொது பெரிய திட்டத்தையும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கொடுக்கவில்லை. மக்கள் செல்வாககை இழந்த ஸ்டாலினுக்கு அடுத்த ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என பயம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய்யான தகவலை முதலமைச்சர் பரப்பி வருகிறார்
நாங்கள் புதிய மாவட்டத்தை கொண்டு வந்ததால் தான் நீங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இங்கே திறந்தீர்கள். தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் சென்று வந்துவிட்டேன். இதனால் தனது தொண்டை முழுவதும் புண்ணாகிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை. வீட்டு மக்களைப் பற்றிதான் கவலைப்படுகிறார். திறமையற்ற பொம்மை முதலமைச்சர் எனவும் விமர்சித்தார். ஸ்டாலின் அவர்களே சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. .கீழே உள்ள சக்கரம் மேலே கண்டிப்பாக வரும். உங்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் அனைத்தையும் நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக காட்டுவோம்.
மன்னர் ஆட்சி அமைக்க துடிக்கும் ஸ்டாலின்
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கப்படுகிறது. பத்து ரூபாய் பாலாஜி என பட்டப்பெயர் வந்துவிட்டது. ஒரு நாளைக்கு 15 கோடி டாஸ்மாக் கடையில் இருந்து வருகிறது. 5,400 கோடி வருடத்திற்கு வருகிறது. பல்லாயிரக்கணக்கான கோடிபணத்தை கொள்ளை அடித்தது திமுக அரசாஙங்கம். சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் 30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என திணறுகின்றார்கள் என திமுக நிதியமைச்சர் தெரிவித்தார். முப்பதாயிரம் கோடி வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுவது வெளிநாட்டிற்கு தொழில் முதலீடு செய்வதற்காதக போனார். இப்படிபட்ட முதலமைச்சர் நாட்டிற்கு தேவையா.? திமுக என்றாலே வாரிசு அரசியல். மன்னர் ஆட்சி இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. மீண்டும் மன்னர் ஆட்சி அமைப்பதற்கு ஸ்டாலின் துடிப்பதாக தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் கடுமையான நெருக்கடி தரப் போகிறார்கள். விசிக ஆட்சியில் பங்கு கேட்கிறது, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன. தேர்தல் நெருங்கும்போது சில கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும். ஜால்ரா போடுபவர்களுக்கே திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
திமுக ஆட்சியல் நேர்மையாக அதிகாரிகளுக்கு இடமில்லை
திமுக ஆட்சியல் நேர்மையாக அதிகாரிகளுக்கு மதிப்பில்லை. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை பிடுங்கி உள்ளனர். நேர்மையான அதிகாரிகளை கேவலப்படுத்தினால் நாட்டில் எப்படி அதிகாரிகள் மக்கள் பணியை செய்வார்கள்? என்ற கேள்வி எழுப்பினார். போதையின் பாதையில் செல்லாதீர்கள் என அனைத்தும் முடிந்த பிறகு முதல்வர் சொல்கிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல் பல்வேறு அதிகாரிகள் ஜால்ரா அடித்துக்கொண்டு உங்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் அதிகாரிகளை தலையில் தூக்கி கொண்டு ஆடுகிறீர்கள்.
முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு மூலம் திமுக கட்சியில் உறுப்பினர்களாக சேருங்கள் என வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கிறார். மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டு கதவைத் தட்டி வீட்டில் உள்ளதை தூக்கி கொண்டு சென்று விடப் போகிறார்கள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டியில் மனு வாங்கினார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியில் உள்ள மனுக்களை எடுத்து தீர்வு காண்பேன் என தொவித்தார். இப்படி கூறிவிட்டு எதற்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவங்கி மக்களை ஏமாற்றுகிறார். ஒருவரை ஏமாற்ற வேண்டும்மென்றால் சதுரங்க வேட்டையில் வரும் வசனத்தைப்போன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட நகலை காண்பித்து ஸ்டாலின் ஆசையை தூண்டுகிறார். மக்கள் ஏமாற வேண்டாம்.
பிறக்கும் குழந்தை மீது ஒன்றரை லட்சம் கடன்
ஸ்டாலின் முதலமைச்சர் ஆனவுடன் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன்வாங்கியுள்ளார். திமுக ஆட்சி முடிந்தவுடன் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன்வாங்கியிருப்பீர்கள், நீங்களா பொருளாதாரத்தை உயர்த்த போகிறிர்கள். பிறக்கும் குழந்தை ஒன்றரை லட்சம் கடனாளியாகிவிடுகிறது. திமுக ஆட்சியில் மளிகை பொருட்கள் முதல் கட்டுமான பொருட்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாதவராக முதலமைச்சர் உள்ளார் என்றார்.
அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரகம் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக அரசு. மக்களின் விவசாய விளை நிலங்களை பறிக்கப் பார்த்தவர் ஸ்டாலின். மீத்தேன் மற்றும் ஈத்தேன் திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்
நொறுங்கிபோன திமுக கோட்டை
அதிமுக ஆட்சியில் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இனி யாராலும் இந்த மண்ணை நெருங்க முடியாது. விளைவிக்கின்ற விளைபொருட்களுக்கு அதிமுக ஆட்சியில் நல்ல விலை கிடைக்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை திமுக ஆட்சியில் விற்பனை செய்ய முடியவில்லை. திறந்தவெளியில் நெல்மணிகள் அடுக்கி வைக்கப்படும் சூழல் உள்ளது. நெல்மணிகள் மழையில் நனைந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையத்தில் முட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது. விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் இந்த அரசு தேவையா? டெல்டா மாவட்டம் என்றால் திமுகவின் கோட்டை என சொல்கிறார்கள். அந்த கோட்டை எல்லாம் நொறுங்கிப் போய்விட்டது. ஸ்டாலின் அவர்களே எந்தவித நடிப்பு நடித்தாலும் ஒன்றும் எடுபடாது.
தினம்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து போஸ் கொடுப்பதுதான் ஸ்டாலின் பணி திமுக தேர்தல் அறிக்கையில் தற்போது வரை 10% அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று கொள்ளை புறத்தின் வழியாக ஆட்சி அமைத்த அரசாங்கம் திமுக. தற்போது 100 நாள் வேலைத்திட்டம் 50 நாட்களாக மாற்றப்பட்டு விட்டது. மத்திய அமைச்சர் இடம் இது தொடர்பாக தெரிவித்தோம். ஆனால் மத்திய அரசு பலமுறை மாநில அரசிடம் புள்ளிவிவரம் கேட்டபோது மாநில அரசு தர மறுத்ததாகவும் தெரிவித்தார்.
பொய் சொல்வதற்கு நோபல் பரிசு
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இந்த திமுக ஆட்சியில் சொல்வது அனைத்தும் பொய்தான். பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது மு.க.ஸ்டாலினுக்கு தரலாம். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம் என ஸ்டாலின் உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறைவேற்ற வில்லை. இதுவே ஸ்டாலினின் டபுள் கேம். நெல் கொள்முதல் நிலையத்தில் முட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது. விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் இந்த அரசு தேவையா? தற்போது போராட்ட களமாக தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு அடியோடு ஓழித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா விற்பனை எங்கு பார்த்தாலும் அதிகமாக இருப்பதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. மூன்று வருடமாக இது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறோம். போதையின் பாதையில் செல்லாதீர்கள் என தற்போது மு.க ஸ்டாலின் பேசுகிறார். இதன்மூலம் தமிழகத்தில் போதைப்பொருள் இருப்பதை மு.க.ஸ்டாலினை ஒத்துக் கொண்டுள்ளார்.
பஸ்சை பற்றி பேச என்ன தகுதியுள்ளது
தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுத்து இருந்தால் இது போன்ற நிலை வந்திருக்காது. திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா காமராஜர் குறித்து அவதூறாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி கண்டிக்கத்தக்கது. இந்தப் பேச்சுக்கு 2026 பொதுமக்கள் நெத்தியடி கொடுக்க வேண்டும். நான் பேருந்தில் வந்தால் சுந்தரம் டிராவல்ஸ் என மு.க.ஸ்டாலின் என்னை விமர்சித்தார். நான் விவசாயி இந்த வாகனத்தில் தான் வருவேன். உங்களுடைய டிரஸ்டில் மட்டும் 8000 கோடி உள்ளது. நீங்கள் பென்ஸ் மற்றும் ஹெலிகாப்டர், தனி விமானத்தில் கூட வரலாம். நான் இது போன்ற வண்டியில் தான் வரவேண்டும். தமிழகம் முழுவதும் ஓட்டை உடைசலான பேருந்துகள் உள்ளது. நீங்கள் எனது பஸ்ஸை பற்றி பேசுகிறீர்களா?
தந்தை அடையாளத்தில் நான் வரவில்லை
இது மண்வெட்டி பிடித்த கை. ஏர் ஒட்டிய கை. உங்களைப் போன்று கோட் சூட் போட்டுக்கொண்டு போட்டோ எடுக்க தெரியாது. நீங்கள் வந்த பாதை வேறு நான் வந்த பாதை வேறு. உங்களைப் போன்று தந்தை அடையாளத்தில் நான் வரவில்லை. கஷ்டப்பட்டு உழைத்து அதிமுகவில் உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன். இதுபோன்று திமுக ஆட்சியில் கஷ்டப்பட்டு உழைத்தால் உயர் பதவிக்கு வர முடியுமா? உதயநிதி திமுக கட்சிக்கு என்ன செய்தார். துரைமுருகன் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்தார். அவருக்கு துணை முதலமைச்சர் கொடுக்கப்படவில்லை. அக்கட்சியில் ஜனநாயகம் உள்ளதா? மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், திமுக ஆட்சியில் கரண்ட் பில் விலையை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியவர் மு.க.ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட லேப்டாப் அனைத்தும் கொடுக்கப்படும். Bye bye ஸ்டாலின் என கூறி உரையை முடித்தார்.