யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக தீவிரமாக கருத்துக்களை பதிவிட்டு வந்தவர் மாரிதாஸ். கடந்த புதன்கிழமை குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.




நாடே வேதனை கொண்ட அந்த உயிரிழப்பு குறித்து யூ டியூபர் மாரிதாஸ் அவதூறு பரப்பும் வகையில் டுவிட் பதிவிட்டார். இதையடுத்து, மதுரையில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் மாரிதாஸை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் தேனியில் உள்ள சிறையில் அடைத்தனர்.


இந்த நிலையில், தேனியில் சிறையில் உள்ள மாரிதாஸ் மோசடி வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் மாரிதாஸ் போலி மின்னஞ்சல் அனுப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது அந்த தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தது.




அப்போது, அவர் மீது மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மாரிதாசை போலீசார் இந்த பிரிவுகளின் கீழும் கைது செய்துள்ளனர். 


மாரிதாஸை கைது செய்ததற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண