நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களிடம் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது,


“ ஜனநாயகத்தில் ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் இருக்கின்றது. நதிகளை சாக்கடையாக மாற்றிவிட்டு, சாலைகளை எல்லாம் சாக்கடை ஓடும் வழித்தடமாக மாற்றி மக்கள் வாழ்க்கையை விளையாட்டாக மாற்றிவிட்டார்கள். அரசியலில் உறவும் தேவையில்லை, பகையையும் தேவையில்லை. நல்லது நடக்கும்போது பாராட்டுவதும், நடக்காதபோது அரசை விமர்சிப்பதும்தான் எங்கள் நோக்கம்.




மகாத்மா காந்தியின் கனவான பஞ்சாயத்து ராஜ்ஜை நனவாக்க சுதந்திரத்துக்கு பிறகு நமக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமம் அளிக்க வகை செய்யும் பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்தம் கடந்த 1993 இல் மேற்கொள்ளப்பட்டது. 2010 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க : Annamalai Kutty story: முதல் பரிசுக்கான மேடை குறித்து குட்டிக்கதை கூறிய அண்ணாமலை


ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிச்சயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். எங்களை பா.ஜ.க.வின் பி டீமாக இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்தவர்கள்தான் தற்போது உண்மையில் அக்கட்சியின் பி டீமாக ஆக உள்ளனர்” இவ்வாறு அவர் பேசினார்.


சட்டசபைத் தேர்தலின்போது கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியை பா.ஜ.க.வின் பி டீம் என்று தி.மு.க. விமர்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கமல்ஹாசன் தி.மு.க.வை பா.ஜ.க.வின் பி டீம் என்று விமர்சித்துள்ளார். 




கடந்த சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி தமிழ்நாடு முழுவதும் தனித்துப் போட்டியிட்டது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வெற்றியின் விளிம்பு வரை சென்று வானதி சீனிவாசனிடம் வெற்றியை பறிகொடுத்தார். 


மேலும் படிக்க : "அதானிக்கு நிலக்கரி சுரங்கங்களை அள்ளிக்கொடுத்ததே தொடர் மின்வெட்டுக்கு காரணம்" - சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு !


மேலும் படிக்க : 'அண்ணன் திருமா'கிட்ட பேசிட்டு ஒரு முடிவை சொல்லுங்க..! விசிக சவாலை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண