மதுரையில் ' சுவடுகளின் தனி ஒரு மனிதனுக்கு ' - என்ற அமைப்பின் மூலம் கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்த ஏழைகளுக்கும் தினம்தோறும் உணவு வழங்கி வந்தனர். இந்த திட்டத்தின் மூலம் ஏராளாமான பொதுமக்கள் பயன்பட்டனர் ஏன்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த அமைப்பின் நிகழ்ச்சி மதுரை உள்ள தனியார் விடுதி ஓன்றில்  நடைபெற்றது, இதில் மதுரை  எம். பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். பின்னர் , பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

Continues below advertisement

Continues below advertisement

போலி மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் அரசுப்பணிகளில் வடமாநிலத்தவர் சேர்ந்துள்ளது குறித்த கேள்வி? 

பெரிய சதி வலை பிண்ணப்பட்டு கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு சேர்கிற, வேலைக்கு எடுக்கப்பட்டு கொண்டிருக்கிற தேர்வர்களுக்கு பின்னால் மிகப்பெரிய சதி வலை பிண்ணப்பட்டு கொண்டுள்ளது. இந்த சதி வலை மொழி சார்ந்து இந்தியை மையப்படுத்தியும், பிராந்திய மொழி தேர்வுகளில் அவர்கள் தேர்வு பெறுவது எப்படி என கேள்விக்குறியாக உள்ளது. தமிழே தெரியாதவர்கள் வெற்றி பெறுகின்றனர். மேலும் அவர்கள் கொடுக்கிற சான்றிதழ்களிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுகிறது. தமிழகத்தில் இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பை வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கான சில குறிப்பிட்ட நிறுவனங்கள் அரசியல் பின்னனியோடு இதனை செய்வதாக தெரிகிறது. முழுமையாக இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மின்பற்றாக்குறை குறித்த கேள்விக்கு ? 

நிலக்கரி சுரங்கங்களை அதானிக்கு  அள்ளிக்கொடுத்த மோடி அரசு. நேரடியான காரணம் இது தான். அதானிக்கு நிலக்கரி சுரங்கங்களை அள்ளிக்கொடுத்ததால் நாட்டில் மின்பற்றாக்குறை. ஒன்றிய அரசு நிர்வாகத்தின் தோல்வியாக இதை பார்க்கிறேன்.

' இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - தனுஷ் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார் - தனுஷின் உண்மையான தந்தை எனக்கூறும் கதிரேசன் மனுத்தாக்கல்