பணத்தை ஆயுதமாக பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மோடி அரசை கண்டித்து மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திய தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்பழனிவேல் தியாகராஜன் மேடையில்...,” இன்றைக்கு இருக்க கூடிய ஒன்றிய அரசு ஜனநாயக சட்டமைப்பின் அடிப்படையில் நம்மளுக்கு இருக்க வேண்டிய உரிமையையோ கொடுக்காமல் நம்மளை துன்பத்திலும் நம் மக்கள் முன்னேற்றத்தை பின்தங்க வைக்கும் வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. இதனை எடுத்துக்காட்டும் வகையில் பல உதாரணங்கள் கூறப்பட்டிருக்கின்றன ஆனால் அடிப்படையாக நான் சொல்ல வேண்டியது, இந்த அரசாங்கமே பொருளாதாரத்திலும் சமுதாய முன்னேற்றத்திலும் தவறான கண்டு கொண்டிருக்கிற அரசாங்கம் இவர்களுக்கு அடிப்படை பொருளாதார மேலாண்மையும் தெரியவில்லை.
அதோடு கொடூரம் மக்கள் நலன் உங்களுக்கு அக்கறையே இல்லை தேர்தல்ல ஜெயிக்கணும் அதனால் கட்சிக்கும் பல வகையிலும் அவங்க நிதிய சேக்கணும் என்று தான் உங்களுடைய இலக்கு அதை தாண்டிவிட்டால் அவர்களுடைய நண்பர்கள் அம்பானிக்கு எப்படியாவது நாட்டை வித்துடனும் மக்களுடைய முன்னேற்றத்தில் எந்த ஒரு அக்கறையும் இல்லாத ஒரு அரசாங்கமாக தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் நான் பல உதாரணம் கூறலாம் பொது நிறுவனங்கள் லாபத்தில் இருந்தவையிலிருந்து எல்லா நிதியையும் சுருட்டி எடுத்துக்கொண்டு போய் அதற்குப் பிறகு கம்மியான விலையில் அவர்கள் நண்பர்களுக்கு விற்கிறது,பொது சொத்துக்கள் ஏர்போர்ட் எல்லாத்தையும் அதானி நண்பருக்கு விற்பது,
வரி குறைப்பில் யாருக்கு லாபம்
பத்து ஆண்டுகளாக கார்ப்பரேட்டுக்கு மேல் செலுத்தப்படும் வரியை கிட்டத்தட்ட மூணுல ஒரு பங்கு குறைத்து அவர்களுடைய மொத்த வரி எடுக்கிறதை பல லட்சம் கோடியாக குறைத்து அதேபோல் இன்றைக்கு தனி நபர் வருமானத்திலும் யாரெல்லாம் கூடுதல் வருமானம் பெறுரார்களோ அவர்களுக்கெல்லாம் வரியை குறைக்கும் வகையில் ஒரு லட்சம் கோடிக்கு தனிநபர் வருமானம் பரிசில் இன்கம் டேக்ஸ் கட் பண்ணிருக்காரு, நான் கேட்கிற கேள்வி இந்தியாவில் சராசரி வருமானம் 2:30 இல்லை 2 3/4 இலட்சம் ஒரு வருஷத்துக்கு நீங்க 6 லட்சத்திலிருந்து 12 லட்சம் சம்பாதிக்கிறவங்களுக்கு வரி குறைவு கொடுத்தீர்கள் என்றால் இங்கு பணக்காரர்கள் நடத்துற அரசா? இல்ல ஏழைகளுக்காக நடத்துற அரசா ? என்றது இதே ஒரு உதாரணம் போதும் இந்த வரி குறைவால் ஒரு லட்சம் கோடி கிடைக்காமல் போகிற ஒன்றிய அரசாங்கம் அதை எங்கெல்லாம் மேக்கப் பண்ணுது எங்களை தான் செலவை வெட்டுது.
அதற்குமேல் சொல்லுவேன் இந்திய வரலாற்றில் பணத்தை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தின அரசாங்கம் இவர்களை போல் இருந்ததே கிடையாது .அரசியல் எல்லா வகையிலும் அரசாங்கத்துடைய செயலை ஓரளவுக்கு திசை திருப்பும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டியது வரும் நாங்க நினைக்கிறோம் சமூக நீதிக்காக வந்தால் அந்த அதற்கு ஏற்ப திட்டங்களுக்கு தான் நம்ம கூடுதல் பண செலவு பண்ணும் கூடுதல் சட்டம் உருவாக்கணும் கூடுதல் கவனம் செலுத்தனும் ஆனால் பணத்தை வைத்து வெறும் அரசியல் செய்த அரசாங்கம் இந்த பாஜக அரசாங்கம்.
பணம் ஆயுதம்:
புயல் வந்தால் இல்லை ஏதாவது பேரிடர் வந்தால் அவங்க ஆளும் மாநிலங்களில் அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள், இல்ல தேர்தல் அடுத்த வருஷம் வரப்போகிற மாநிலங்களில் அள்ளி அள்ளி கொடுப்பார்கள் ஆனா நம்ம மாநிலத்தில் பத்து பைசா கொடுக்க மாட்டார்கள்.எல்லா வகையிலும் முதலீட்டில் வரி பங்கில் சென்ட்ரலில் ஸ்பான்சர் திட்டத்தில் டிசாஸ்டர் திட்டத்தில் எல்லா வகையிலும் அவங்க பணத்தை அரசியல் ஆயுதமாக தான் பயன்படுத்துகிறார்கள். தவிர ஒரு நல்ல குணத்தோடு எல்லோரும் வளர வேண்டும் ஏதோ ஒரு நியாயம் இருக்கணும் அப்படி என்று அடிப்படையில் எதுவுமே அவங்க செய்யறது இல்லை .
இந்த பணத்தை ஆயுதமாக பயன்படுத்துவது சட்டத்துக்கு விரோதமாக சட்டமைப்புக்கு விரோதமாக பயன்படுத்துவது இது மட்டும் இல்லை, ஆளுநர் எப்படி இருக்கிறார். நேற்று நீங்கள் கவனித்திருக்கலாம் உச்சநீதிமன்றத்தில் நம்முடைய ஆளுநர் என்று பெயரில் ஒருத்தர் இருக்காரு பஸ் நடத்துனரா இருக்க வேண்டியவர் அவரை வச்சுக்கிட்டு என்ன சொல்றாங்க 12 சட்டம் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை காரணமும் சொல்லாமல் செயல்பாட்டுக்கும் கொண்டாடாமல் கையெழுத்து போடாமல் உட்கார்ந்து இருக்கிறார். நாட்டோட எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டிய எதிர்காலம் இருட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுடைய முதல் பலனாக உபிலயே 2024 தேர்தலில் 60 70 சீட் வைத்திருந்தார்கள் 40 சீட்டுக்கு குறைக்கப்பட்டார்கள் மக்கள் என்னைக்கோ ஒருநாள் இதெல்லாம் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள் என்ற நம்புகிறேன்” என்றார்.