அமமுக ஆலோசனை  கூட்டம்

மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அமமுக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனை  கூட்டம் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. அதில் ஏராளமான அமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 
டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு
 
முன்னதாக டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்துக் கூறும் போது...,” நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இருக்கிறோம். எடப்பாடி தான் டெல்லியில் சென்று அமித்ஷாவை சந்தித்து வெளிப்படையாக சொல்லாமல் பேசி வருகிறார்கள். திமுக என்கிற தீய சக்தி ஆட்சியில் நீடிக்க கூடாது திமுகவுக்கு எதிராக மாற்று சக்தி தான் தேசிய ஜனநாயக கூட்டணி நினைத்து வருகிறது. திமுக வெற்றி பெறக் கூடாது என நினைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் எந்த கட்சியும் வரலாம்.
 
ஆசையை சொல்லி இருக்கிறார்
 
விஜய் அவருடைய ஆசையை சொல்லி இருக்கிறார். உண்மையான மாற்றாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி தான். சுயநலத்தால் பதவி வெறியால் திமுக மீது உள்ள பயத்தால் தங்கள் மீது வழக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக திமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மறைமுகமாக சிலர் உதவி வருகிறார்கள்.
 
ஓபிஎஸ் கட்சிக்கு துரோகம் செய்தார் அதனால் அவரை சேர்க்க மாட்டோம் என ஈபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு
துரோகத்தின் வடிவமே பழனிசாமி. துரோகத்தின் முழு வடிவமாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. துரோகத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்றார்.
 
நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு
 
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட பாஜக ஆட்சிக்காலத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளது. அதனை மறைப்பதற்காக திமுகவினர் மத்திய அரசின் மீது பழி போடுகிறார்கள்.
 
தொடர்ந்து வரும் 2026 இல் முதல்வராக ஸ்டாலினும் தலைவராக விஜயும் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கருத்துக் கணிப்புகள் வந்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்விகளுக்கு
கருத்துக் கணிப்பு என்பதெல்லாம் பொய் மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும் என்றார்.
 
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கொலை வழக்கு தொடர்பாக பணியில் அலட்சியம்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்