எடப்பாடியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசிற்கு கழக அம்மா பேரவையின் சார்பில் நன்றி - ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கோட்டைமேடு பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பின், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் கூறியதாவது...,” மக்களின் கோரிக்கையை ஏற்று இசட் பிளஸ் பாதுகாப்பு இன்றைக்கு எடப்பாடியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எடப்பாடியாருக்கு சென்னையில் உள்ள வீட்டிற்கும், சேலத்தில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. எடப்பாடியார் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகும். ஏற்கனவே ஒய் பிளஸ் பாதுகாப்பு இருந்தது. இதனை தொடர்ந்து இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்., என்று கழக அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோரிக்கை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
விரைவில் முதலமைச்சராக வரவுள்ள எடப்பாடி
இதனை தொடர்ந்து மத்திய அரசு கோரிக்கைகளை பரிசீலனை செய்து இன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பை எடப்பாடியாருக்கு வழங்கி உள்ளது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல விரைவில் முதலமைச்சராக வரவுள்ள எடப்பாடியாருக்கு இன்றைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எட்டு கோடி மக்களின் பாதுகாவலர் எடப்பாடியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு கழக அம்மா பேரவையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் தமிழக மக்களின் உள்ளமும் குளிர்ந்து உள்ளது.” என கூறினார்.