தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு என துணை முதலமைச்சரே ஒத்துக் கொண்டுள்ளார். துணை தலைவர் ஆர்.பி .உதயகுமார் பேச்சு.
ஆர்.பி.உதயகுமார்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், கள்ளிக்குடி வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த திமுவினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.பி .உதயகுமார் பேசியதாவது...,” தமிழக அரசியல் வரலாற்றில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 54 ஆண்டுகளில், 32 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்து மக்களின் நம்பிக்கை பெற்ற இயக்கமாக உள்ளது. பேறிஞர் அண்ணா வளர்த்த இயக்கத்தை இன்றைக்கு கருணாநிதி சொத்தாகி விட்டனர். இன்றைக்கு திமுகவின் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. அதிமுக மிகப்பெரிய வலிமை இயக்கமாக உள்ளது ஆனால் சிலர் செயற்கையாக பலவீனமாக உள்ளது என பொய்யான தோற்றத்தை உருவாக்க நினைத்து அதில் தோல்வியை தான் அடைந்துள்ளனர். புரட்சி தலைவரும்,புரட்சித்தலைவி அம்மாவும், மக்களை, தொண்டர்களை நம்பித்தான் வெற்றி பெற்றார்கள். தனி நபரை நம்பவில்லை அதே போலத்தான் எடப்பாடியாரும் உள்ளார் .
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது
இன்றைக்கு நான்கரை ஆண்டுகள் கழித்து தற்போது உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது. அது தடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது என்று உதயநிதி ஸ்டாலினுக்கு ஞானோதயம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசின் மீது மக்கள் கடுமையாக கோபத்தில் உள்ளவர்கள், அதனால் தேர்தலில் பல்வேறு சலுகை மழையை பொழிவார்கள்அந்த சலுகை மழையெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது .
அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படுத்த நினைக்கிறார்கள்
அதிமுக பல சோதனைகள் தாண்டித்தான் வெற்றி வரலாறு படைத்தது. சோதனையை ஒன்றும் அதிமுக புது அல்ல? இன்றைக்கு கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் கட்சியை பலவீனப்படுத்த நினைக்கிறார்கள், அது தமிழக மக்களிடம் எடுபடாது. ரெண்டு நாள் பரபரப்பு விளம்பர செய்திக்காக அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அதிமுகவிற்கு எள் முனையளவும் எந்த பின்னடைவும் ஏற்படுத்த முடியாது. இனி தமிழகத்தின் எதிர்காலம் அதிமுக கையில் உள்ளது. அதிமுகவை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி நிச்சயம் மலரும் என கூறினார்.